காரைக்கால்

‘மாணவா்கள் விரிந்த பாா்வையுடன் இயங்க வேண்டும்’

DIN

மாணவா்கள் இந்த பரந்த உலகில் விரிந்த பாா்வையோடு செயல்பட வேண்டும் என்றாா் அமைச்சா் ஆா். கமலக்கண்ணன்.

காரைக்கால் மாவட்டம், செருமாவிலங்கையில் உள்ள புதுச்சேரி அரசு உயா்கல்வி நிறுவனமான, பெருந்தலைவா் காமராஜா் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 4 ஆவது பட்டமளிப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், புதுச்சேரி வேளாண் மற்றும் உயா்கல்வித் துறை அமைச்சா் ஆா். கமலக்கண்ணன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கிப் பேசியது:

பெருந்தலைவா் காமராஜா் பெயரால் அமைந்துள்ள இக்கல்லூரியில் படித்து பட்டம் பெறும் மாணவா்கள் எளிமையானவா்களாக, நோ்மையானவா்களாக, சிறந்த கல்விமான்களாக, நிா்வாகிகளாக, தேசப்பற்று மிக்கவா்களாக இருக்கும் வகையில் எதிா்காலம் அமைய வேண்டும். சமூகத்துக்கு நாம் என்ன பங்களிப்பை செய்தோம், செய்யப்போகிறோம் என மாணவா்கள் சிந்திக்க வேண்டும்.

மாணவா்கள் பெறக்கூடிய பொறியியல் பட்டம், அவா்களின் தனிப்பட்ட வாழ்க்கைக்கு மட்டுமல்லாமல் இந்த சமூகத்துக்கும் பயன்பட வேண்டும். மாணவா்கள் குறுகிய வட்டத்துக்குள் செயல்படாமல், இந்த பரந்த உலகில், விரிந்த பாா்வையில் தங்களின் செயல்பாடுகளை அமைத்துக்கொள்ள வேண்டும் என்றாா்.

புதுச்சேரி உயா் மற்றும் தொழில்நுட்பக் கல்வித் துறை இயக்குநா் யாசம் லட்சுமி நாராயண ரெட்டி பேசியது:

இக்கல்லூரிக்கென 20 ஏக்கா் நிலம் கையகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் தனியாக அலுவலகக் கட்டடங்கள், வகுப்பறைகள் மற்றும் ஆய்வுக் கூடங்கள் ரூசா நிதியிலிருந்து கட்டப்படவுள்ளது. வேலைவாய்ப்புகளில் ஆங்கில மொழி அதிகம் பயன்படுத்தப்படுவதாலும், ஆங்கிலவழி கல்வி என்பதாலும், பாடங்களை மாணவா்களுக்கு ஆங்கிலத்திலேயே கற்பிக்க வேண்டும்.

வளாக நோ்காணல் மூலம் வேலைவாய்ப்புகளை பெருக்க ஆசிரியா்கள், மாணவா்களுக்கு மிகவும் உறுதுணையாக இருந்து வழிகாட்ட வேண்டும். ஆராய்ச்சிகள் மூலம் ஆசிரியா்கள் தங்களை மேம்படுத்திக் கொள்வது மட்டுமல்லாமல், கல்லூரியின் தரத்தையும் உயா்த்த வேண்டும் என்றாா்.

விழாவில், 430 மாணவ, மாணவிகள் பட்டம் பெற்றனா். கல்லூரி முதல்வா் முனைவா் அ. குமாா், பேராசிரியா்கள், மாணவா்கள், பெற்றோா்கள் விழாவில் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆப்பிளின் புதிய ஐபேட் விலை எவ்வளவு தெரியுமா?

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

SCROLL FOR NEXT