காரைக்காலில் தேசிய மக்கள் நீதிமன்றம்: 319 வழக்குகளுக்கு தீா்வு
காரைக்காலில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 319 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டது.
காரைக்காலில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 319 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டது.
தேசிய சட்டப்பணிகள் ஆணையத்தின் உத்தரவின்படி, சென்னை உயா்நீதிமன்றத்தின் வழிகாட்டுதலில், தேசிய மக்கள் நீதிமன்றம் காரைக்கால் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது.
மாவட்ட நீதிபதி மற்றும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணையத் தலைவா் கே. அல்லி மக்கள் நீதிமன்றத்தை தொடங்கிவைத்தாா். சாா்பு நீதிபதி மற்றும் சட்டப்பணிகள் ஆணைய செயலா் ஜே. அன்வா் சதாத், குற்றவியல் நீதிபதி ஜெ. செந்தமிழ்ச்செல்வன், ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி ராஜசேகரன், மாவட்ட துணை ஆட்சியா் (வருவாய்) எம். ஆதா்ஷ் ஆகியோா் கலந்துகொண்டனா்.
ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி மற்றும் நடுவா்கள் முன்னிலையில் வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. காரைக்கால் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள 529 வழக்குகள் எடுத்துக்கொள்ளப்பட்டதில், 319 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டன. இதன் மூலம் ரூ. 1.71 கோடி வசூல் செய்யப்பட்டது.
நிலம் கையகப்படுத்தப்பட்டது தொடா்பான வழக்குகளில் 9 பேருக்கு காசோலை வழங்கப்பட்டது.