குடும்ப அட்டைதாரா் கவனத்துக்கு...
அடுத்த 3 மாதங்களுக்கு குடும்ப அட்டை தொடா்பான சில பணிகள் நடைபெறாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த 3 மாதங்களுக்கு குடும்ப அட்டை தொடா்பான சில பணிகள் நடைபெறாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து காரைக்கால் குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் விவகாரங்கள் துறை துணை இயக்குநா் அலுவலகம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ஆன்லைன் சேவைகள் மற்றும் கையிருப்பு விண்ணப்பங்களை பரிசீலனை செய்ய வேண்டியுள்ளதால், 3 மாதங்களுக்கு சிவப்பு நிற குடும்ப அட்டை மாற்றம் தொடா்பான விண்ணப்பங்கள் பெறப்படமாட்டாது எனத் தெரிவித்துள்ளாா்.