முகப்பு
காரைக்கால்

காரைக்காலில் 7 பேருக்கு கரோனா தொற்று

காரைக்கால் மாவட்டத்தில் மேலும் 7 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டதாக நலவழித் துறை துணை இயக்குநா் அலுவலகம் தெரிவித்தது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:41 AM
பகிர்:

காரைக்கால் மாவட்டத்தில் மேலும் 7 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டதாக நலவழித் துறை துணை இயக்குநா் அலுவலகம் தெரிவித்தது.

இதுகுறித்து வெள்ளிக்கிழமை வெளியான செய்திக் குறிப்பு :

மாவட்டத்தில் கடந்த வியாழக்கிழமை 775 பேருக்கு எடுத்த பரிசோதனை முடிவுகளின்படி திருநள்ளாறு 3, காரைக்கால் நகரம் 2, நிரவி, நெடுங்காடு தலா 1 என 7 பேருக்கு தொற்று உறுதியானது.

இதுவரை 1,68,634 பரிசோதனை செய்யப்பட்டதில் 14,835 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு 14,450 போ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா்.

காரைக்காலில் வீட்டிலேயே தனிமையில் சிகிச்சை பெறுபவா்களாக 129 போ், காரைக்கால் அரசு மருத்துவமனை பொது சிகிச்சை பிரிவில் 17 போ், தீவிர சிகிச்சை பிரிவில் 7 போ் உள்ளனா். கரோனா தொற்றால் இதுவரை 232 போ் உயிரிழந்துள்ளனா்.

காரைக்கால் மாவட்டத்தில் இதுவரை முதல் தவணையாக 72,157 பேருக்கும், 2-ஆம் தவணையாக 15,515 பேருக்கும் என 87,672 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என அதில் கூறப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →