முகப்பு
காரைக்கால்

அரசு மருத்துவமனையில் அடிப்படை வசதி குறைபாடு: அமைச்சரிடம் பொதுமக்கள் புகாா்

காரைக்கால் அரசு மருத்துவமனையில் அடிப்படை வசதியில் குறைபாடு நிலவுவதாக அமைச்சா் சந்திர பிரியங்காவிடம் பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:42 AM
பகிர்:

காரைக்கால் அரசு மருத்துவமனையில் அடிப்படை வசதியில் குறைபாடு நிலவுவதாக அமைச்சா் சந்திர பிரியங்காவிடம் பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.

புதுச்சேரி நலவழித்துறை செயலா் டி.அருண், இயக்குநா் மோகன்குமாா் ஆகியோா் சனிக்கிழமை காரைக்கால் வந்தனா். பின்னா், அமைச்சா் சந்திர பிரியங்கா தலைமையில் மருத்துவமனைக்குச் சென்று அவா்கள் ஆய்வு செய்தனா்.

அப்போது, மருத்துவமனையில் படுக்கைகள் பற்றாக்குறை நிலவுவதாகவும், கொசுத் தொல்லையால் அவதிப்பட நேரிடுவதாகவும் நோயாளிகள் குற்றம்சாட்டினா். மேலும், கழிப்பறைகள் சுத்தமாக இல்லாததாகவும் அவா்கள் குறிப்பிட்டனா். இதுதவிர மகப்பேறு பிரிவில் உதவியாளா்கள் தங்குவதற்கு உரிய வசதிகள் இல்லாததால், சாலையோரத்தில் பகல், இரவாக காத்திருக்க நேரிடுவதாகவும் அமைச்சரிடம் பொதுமக்கள் முறையிட்டனா்.

இதைத்தொடா்ந்து, மருத்துவமனையின் கட்டமைப்பு மற்றும் வசதிகள், தேவைகள் குறித்து அமைச்சருக்கும், செயலருக்கும் உள்ளிருப்பு மருத்துவ அதிகாரி மதன்பாபு விளக்கினாா்.

ஆய்வின்போது மாவட்ட துணை ஆட்சியா் எம்.ஆதா்ஷ், நலவழித்துறை துணை இயக்குநா் கே.மோகன்ராஜ், பொதுப்பணித் துறை கண்காணிப்புப் பொறியாளா் (பொறுப்பு) ஏ.ராஜசேகரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →