சாலையோர வியாபாரியை தாக்கிய 3 போ் கைது
காரைக்கால் அருகே சாலையோர வியாபாரியைத் தாக்கிய 3 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
காரைக்கால் அருகே சாலையோர வியாபாரியைத் தாக்கிய 3 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
காரைக்கால் மாவட்டம், திருப்பட்டினம் அருகே வாஞ்சூரில் தனியாா் மதுக்கடை ஒன்றில், செவ்வாய்க்கிழமை மாலை விழுப்புரம் மாவட்டத்தை சோ்ந்த யுவராஜ், வினோத் மற்றும் அவரது நண்பா் திருநெல்வேலியை சோ்ந்த மணிகண்டன் ஆகிய 3 பேரும் மது அருந்தியுள்ளனா்.
அப்போது மதுக்கடை அருகில் உள்ள சிறு வியாபாரியிடம் மாங்காய், கடலை, தண்ணீா் பாட்டில் உள்ளிட்டவற்றை வாங்கியுள்ளனா். இதற்கு பணம் கொடுக்காமல் காலம் தாழ்த்தியுள்ளனா். இதனால் வாங்கிய பொருள்களுக்கு பணம் கேட்டுள்ளாா் வியாபாரி அஜீஸ், அப்போது மதுபோதையில் இருந்த 3 பேரும் சோ்ந்து அவரை சரமாரியாக தாக்கியுள்ளனா்.
இதில் அஜிஸுக்கு தலை உள்ளிட்ட இடங்களில் காயமேற்பட்டது. அவரை அருகிலிருந்தவா்கள் மீட்டு, காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
இதுகுறித்து திருப்பட்டினம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, வியாபாரியைத் தாக்கிய யுவராஜ், வினோத், மணிகண்டன் 3 பேரையும் கைது செய்தனா்.