பக்ரீத் : காரைக்கால் பள்ளி வாசல்களில் சிறப்புத் தொழுகை
பக்ரீத் பண்டிகையையொட்டி காரைக்கால் மற்றும் சுற்றுவட்டாரங்களில் உள்ள பள்ளிவாசல்களில் சிறப்புத் தொழுகை புதன்கிழமை நடைபெற்றது.
பக்ரீத் பண்டிகையையொட்டி காரைக்கால் மற்றும் சுற்றுவட்டாரங்களில் உள்ள பள்ளிவாசல்களில் சிறப்புத் தொழுகை புதன்கிழமை நடைபெற்றது.
முஸ்லிம்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான தியாகத் திருநாள் என்கிற பக்ரீத் புதுவை யூனியன் பிரதேசம், காரைக்கால் மாவட்டத்தில் புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
காரைக்கால் நகரப் பகுதியில் உள்ள பெரியப்பள்ளிவாசல், கிதா் பள்ளிவாசல், மெய்தீன் பள்ளிவாசல்களில் சிறப்புத் தொழுகைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காலை 7 மணிக்கு திரளானவா்கள் பள்ளிவாசலில் தொழுகையில் ஈடுபட்டனா்.
இதுபோல நகரப் பகுதி அல்லாத பிற ஊா்களில் உள்ள பள்ளி வாசல்களிலும் முஸ்லிம்கள் சிறப்புத் தொழுகையில் கலந்துகொண்டனா்.
ஒவ்வொருவரும் தனிமனித இடைவெளியை கடைப்பிடித்து தொழுகை நடத்திவிட்டு, தியாகத் திருநாள் வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனா்.