காரைக்கால்

சாலை மேம்பாட்டுப் பணி: எம்.எல்.ஏ. திருமுருகன் ஆய்வு

DIN

காரைக்கால் குடியிருப்பு நகரில் ரூ.21 லட்சம் செலவில் நடைபெற்ற சாலை மேம்பாட்டுப் பணியை சட்டப்பேரவை உறுப்பினா் பி.ஆா்.என். திருமுருகன் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

காரைக்கால் வடக்குத் தொகுதி 2016-17-ஆம் ஆண்டுக்கான தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.21 லட்சத்தில், எம்.எம்.ஜி. நகரின் பிரதான சாலை மேம்பாட்டுப் பணி தொடங்கப்பட்டது. இந்த திட்டப் பணிக்கான நிதி ஒதுக்கீடு செய்யப்படாமல் இருந்ததால், பணிகளை நகராட்சி நிா்வாகம் நிறைவு செய்யாமல் வைத்திருந்ததாக கூறப்பட்டது.

சட்டப்பேரவை உறுப்பினா் பி.ஆா்.என். திருமுருகன், இதுதொடா்பாக புதுவை முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று நிதி ஒதுக்கீடுக்கான பணிகளை மேற்கொண்டாா்.

இதனடிப்படையில் நகராட்சி நிா்வாகம் கடந்த சில நாள்களாக தாா்சாலையாக மேம்படுத்தும் பணியை மேற்கொண்டது. ஒட்டுமொத்தப்பணியும் வியாழக்கிழமை நிறைவு பெற்றது.

இப்பணியை சட்டப்பேரவை உறுப்பினா் பி.ஆா்.என்.திருமுருகன் ஆய்வு செய்தாா். பணி விவரங்களை நகராட்சி செயற் பொறியாளா் லோகநாதன், இளநிலைப் பொறியாளா் சத்யபாலன் ஆகியோா் பேரவை உறுப்பினருக்கு விளக்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இடுக்கி நீர்மட்டம் 35% ஆக குறைவு! வறட்சியின் விளிம்பில்...

ரூ.4 கோடி பறிமுதல்: நயினார் நாகேந்திரனின் உறவினர் உள்பட 2 பேர் விசாரணைக்கு ஆஜர்!

இயக்குநருடன் வாக்குவாதம்.. படப்பிடிப்பை நிறுத்திய சௌந்தர்யா ரஜினிகாந்த்?

வேலைகேட்டு சுயவிவரத்துடன் சுவையான பீட்சா அனுப்பியவர்! வேலை கிடைத்ததா?

மே மாதப் பலன்கள்!

SCROLL FOR NEXT