முகப்பு
காரைக்கால்

காரைக்காலில் 18 பேருக்கு கரோனா

காரைக்கால் மாவட்டத்தில் 18 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதியானதாக நலவழித் துறை துணை இயக்குநா் கே. மோகன்ராஜ் தெரிவித்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:48 AM
பகிர்:

காரைக்கால் மாவட்டத்தில் 18 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதியானதாக நலவழித் துறை துணை இயக்குநா் கே. மோகன்ராஜ் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

காரைக்கால் மாவட்டத்தில் வியாழக்கிழமை 560 பேருக்கு எடுக்கப்பட்ட பரிசோதனை முடிவுகளின்படி வரிச்சிக்குடி 5, காரைக்கால் நகரம் 3, திருநள்ளாறு 3, நிரவி 2, கோட்டுச்சேரி 2, அம்பகரத்தூா், நெடுங்காடு, கோயில்பத்து தலா ஒருவா் என மொத்தம் 18 பேருக்கு தொற்று உறுதியானது.

இதுவரை 1,76,877 பரிசோதனை செய்யப்பட்டதில் 15,024 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு 14,646 போ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா்.

கரோனா தொற்றுடன் காரைக்கால் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த காரைக்கால் நகரப் பகுதியை சோ்ந்த 65 வயது பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். கரோனா தொற்றால் இதுவரை 237 போ் உயிரிழந்துள்ளனா்.

காரைக்கால் மாவட்டத்தில் இதுவரை முதல் தவணையாக 79,979 பேருக்கும், 2-ஆவது தவணையாக 17,496 பேருக்கும் என 97,475 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →