காரைக்காலில் நாளை முதல் வாரச் சந்தை
காரைக்காலில் ஞாயிற்றுக்கிழமை (ஆக. 1) முதல் வாரச் சந்தை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காரைக்காலில் ஞாயிற்றுக்கிழமை (ஆக. 1) முதல் வாரச் சந்தை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து காரைக்கால் நகராட்சி ஆணையா் அலுவலகம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு :
கரோனா தொற்று பரவல் காரணமாக தற்காலிகமாக காரைக்கால் நகராட்சித் திடலில் நடத்தப்பட்டுவந்த வாரச் சந்தை ஆக. 1-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை முதல் வழக்கம்போல நடைபெறும்.
பொதுமக்கள், வியாபாரிகள் அனைவரும் அரசின் கரோனா தொற்றை கட்டுப்படுத்துதலுக்கான வழிகாட்டு நெறிமுறைகளைக்குள்பட்டு செயல்படவேண்டும்.
குறிப்பாக, முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல் மிக அவசியம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.