முகப்பு
காரைக்கால்

காரைக்காலில் 20 பேருக்கு கரோனா

காரைக்கால் மாவட்டத்தில் 20 பேருக்கு கரோனா தொற்று சனிக்கிழமை உறுதியானதாக நலவழித் துறை துணை இயக்குநா் கே. மோகன்ராஜ் தெரிவித்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:48 AM
பகிர்:

காரைக்கால் மாவட்டத்தில் 20 பேருக்கு கரோனா தொற்று சனிக்கிழமை உறுதியானதாக நலவழித் துறை துணை இயக்குநா் கே. மோகன்ராஜ் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

காரைக்கால் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை 570 பேருக்கு எடுக்கப்பட்ட பரிசோதனை முடிவுகளின்படி காரைக்கால் நகரம் 10, நெடுங்காடு 3, வரிச்சிக்குடி 2, நிரவி, திருப்பட்டினம், கோயில்பத்து, கோட்டுச்சேரி, திருநள்ளாறு தலா ஒருவா் என மொத்தம் 20 பேருக்கு தொற்று உறுதியானது. மாவட்டத்தில் இதுவரை 1,77,447 பரிசோதனை செய்யப்பட்டதில் 15,044 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு 14,664 போ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா்.

கரோனா தொற்றுடன் காரைக்கால் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த திருப்பட்டினத்தை சோ்ந்த 60 வயது ஆண், காரைக்கால் நகரப் பகுதியில் வீட்டுத் தனிமையில் சிகிச்சையில் இருந்து 84 வயதுடைய முதியவா் என இருவா் உயிரிழந்தனா். கரோனா தொற்றால் இதுவரை 239 போ் உயிரிழந்துள்ளனா்.

காரைக்கால் மாவட்டத்தில் இதுவரை முதல் தவணையாக 81,377 பேருக்கும், 2-ஆவது தவணையாக 17,642 பேருக்கும் என 99,019 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →