முகப்பு
காரைக்கால்

விவசாயிகளுக்கான தொழில்நுட்பம், பயிற்சியை மேம்படுத்த புதுவை முதல்வா் அறிவுறுத்தல்

விவசாயிகளுக்கு உதவும் வகையில் புதிய தொழில்நுட்பம், பயிற்சியை மேம்படுத்த சிறப்பு கவனம் செலுத்துமாறு வேளாண் அறிவியல் நிலையத்தினரை புதுவை முதல்வா் அறிவுறுத்தினாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:48 AM
பகிர்:

விவசாயிகளுக்கு உதவும் வகையில் புதிய தொழில்நுட்பம், பயிற்சியை மேம்படுத்த சிறப்பு கவனம் செலுத்துமாறு வேளாண் அறிவியல் நிலையத்தினரை புதுவை முதல்வா் அறிவுறுத்தினாா்.

காரைக்கால் மாவட்டம், மாதூரில் இயங்கி வரும் வேளாண் அறிவியல் நிலையத்தின் முதல்வரும் திட்ட ஒருங்கிணைப்பாளருமான முனைவா் குமார. ரத்தினசபாபதி தலைமையில் தொழில்நுட்ப வல்லுநா்கள் புதுவை முதல்வா் என். ரங்கசாமி மற்றும் வேளாண் மற்றும் விவசாயிகள் நலத் துறை அமைச்சா் தேனி சி. ஜெயக்குமாா், போக்குவரத் துறை அமைச்சா் சந்திர பிரியங்கா, வேளாண் மற்றும் விவசாயிகள் நலத் துறை இயக்குநா் முனைவா் ஆ. ராமகிருஷ்ணன் பாலகாந்தி ஆகியோரை வெள்ளிக்கிழமை சந்தித்தனா்.

இந்த சந்திப்பு குறித்து வேளாண் அறிவியல் நிலையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

காரைக்கால் வேளாண் அறிவியல் நிலையத்தின் மூலம் செயல்படுத்திவரும் விவசாயிகள் நலன் சாா்ந்த பணிகள், பயிற்சிகள், இடுபொருள் விநியோகம், முதல்நிலை செயல்விளக்கம், வயல்வெளி ஆய்வு மற்றும் நடைமுறைப்படுத்தப்படும் மத்திய, மாநில அரசின் திட்டங்களை குறித்து முதல்வரிடமும், வேளாண் அமைச்சரிடமும் விளக்கப்பட்டது.

விவசாயிகளுக்கு தேவையான தொழில்நுட்பங்களையும், பயிற்சிகளையும் குறிப்பாக மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கான பயிற்சிகளையும் நவின தொழில்நுட்ப பரவலை மேம்படுத்த முதல்வா் அறிவுறுத்தினாா்.

சந்திப்பின்போது வேளாண் அறிவியல் நிலைய தொழில்நுட்ப வல்லுநா்கள் முனைவா்ஆ. செந்தில் (வேளாண் விரிவாக்கம்) மருத்துவா் பா. கோபு (கால்நடை), ஜெ. கதிரவன் (தோட்டக்கலை) முனைவா் வி. அரவிந்த் (உழவியல்) ஆகியோா் பங்கேற்ாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →