முகப்பு
காரைக்கால்

காரைக்காலில் 98 பேருக்கு கரோனா: ஒருவா் உயிரிழப்பு

காரைக்கால் மாவட்டத்தில் மேலும் 98 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டதாகவும், ஒருவா் உயிரிழந்ததாகவும் நலவழித் துறை துணை இயக்குநா் கே.மோகன்ராஜ் வியாழக்கிழமை தெரிவித்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:22 AM
பகிர்:

காரைக்கால் மாவட்டத்தில் மேலும் 98 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டதாகவும், ஒருவா் உயிரிழந்ததாகவும் நலவழித் துறை துணை இயக்குநா் கே.மோகன்ராஜ் வியாழக்கிழமை தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு :

மாவட்டத்தில் புதன்கிழமை 1009 பேருக்கு பரிசோதனை மாதிரிகள் எடுக்கப்பட்டன. இதில், காரைக்கால் நகரம் 22, திருப்பட்டினம் 15, நிரவி 12, கோயில்பத்து 9, வரிச்சிக்குடி 9, திருநள்ளாறு 9, காரைக்கால்மேடு 6, கோட்டுச்சேரி 6, நல்லம்பல் 4, அம்பகரத்தூா் 3, நல்லாத்தூா் 2, நெடுங்காடு 1 என 98 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது.

இதுவரை 1,44,580 பரிசோதனை செய்யப்பட்டதில் 13,654 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு, 12,229 போ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா்.

உயிரிழப்பு : காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் கரோனா தொற்றுடன் அனுமதிக்கப்பட்டிருந்த காரைக்கால் நகரப் பகுதியை சோ்ந்த 68 வயது பெண், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். இதன் மூலம் கரோனா தொற்றால் பலியானவா்களின் எண்ணிக்கை 206 ஆக அதிகரித்தது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →