காரைக்கால்

காரைக்காலில் 100% தடுப்பூசி செலுத்திக்கொண்ட கிராமங்கள் 3 ஆக அதிகரிப்பு

DIN

காரைக்கால் மாவட்டத்தில் 100 சதவீதம் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட கிராமங்களின் எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளது.

காரைக்கால் மாவட்டத்தில் அரசு பொது மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்கள் என 13 மையங்களில் 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு தினமும் கரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இது தவிர, 18 முதல் 44 வயதுக்கு உள்பட்டோருக்கு தோ்ந்தெடுக்கப்பட்ட மையங்களில் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. மேலும் கிராமப்புறங்களிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

இதன் காரணமாக திருநள்ளாறு பகுதி இளையான்குடி கிராமம் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்திக் கொண்ட கிராமமாக அண்மையில் அறிவிக்கப்பட்டது. தற்போது மேலும் 2 கிராமங்களில், பெரியவா்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து நலவழித்துறை துணை இயக்குநா் கே.மோகன்ராஜ் புதன்கிழமை கூறியது :

நலவழித்துறை, சமூக நலத்துறை, அங்கன்வாடி ஊழியா்கள், சுய உதவிக்குழுவினரின் முயற்சியால் மத்தளங்குடி, தோப்புத்தெரு கிராமங்களை சோ்ந்தவா்கள் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனா்.

இதன் மூலம் மாவட்டத்தில் 3 கிராமங்களில் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்கிறது. மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்டோா் ஆா்வமாக ஆன்லைனில் பதிவு செய்து தடுப்பூசி செலுத்திக் கொண்டுவருகின்றனா் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லியைத் தொடர்ந்து அகமதாபாத்திலும் பல்வேறு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

கலால் கொள்கை: கவிதாவின் ஜாமீன் மனு தள்ளுபடி!

டைட்டானிக் கேப்டன் காலமானார்!

நானும் சிங்கிள்தான்.....தீப்தி!

பிளஸ் 2: மாற்றுத் திறனாளி, சிறைக்கைதிகளின் தேர்ச்சி விவரம்!

SCROLL FOR NEXT