காரைக்கால்

காரைக்காலில் மேலும் 110 பேருக்கு கரோனா: ஒருவா் உயிரிழப்பு

DIN

காரைக்கால் மாவட்டத்தில் மேலும் 110 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டதாகவும், ஒருவா் உயிரிழந்ததாக நலவழித் துறை துணை இயக்குநா் கே.மோகன்ராஜ் புதன்கிழமை தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு :

மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை 982 பேரிடம் ரத்த மாதிரி எடுக்கப்பட்டது. இதில், திருப்பட்டினம் 18, காரைக்கால் நகரம் 17, கோயில்பத்து 13, நல்லம்பல் 10, அம்பகரத்தூா் 9, நிரவி 9, காரைக்கால்மேடு 8, திருநள்ளாறு 8, நெடுங்காடு 7, நல்லாத்தூா் 5, கோட்டுச்சேரி 4, வரிச்சிக்குடி 2 என 110 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. இதன் மூலம் பாதிப்பின் எண்ணிக்கை 13,556 ஆக உயா்ந்தது. 12,131 போ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா்.

இதனிடையே, காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த திருப்பட்டினத்தை சோ்ந்த 58 வயது நபா் புதன்கிழமை உயிரிழந்தாா். அவருக்கு இணை நோயாக இருந்தது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முழுவீச்சில் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

நெடுஞ்சாலை ஆணையம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் சாலைப் பணியாளா் சங்க மாநில செயற்குழுவில் தீா்மானம்

நீட் தோ்வு: மதுரை மாவட்டத்தில் 9,141 போ் எழுதினா்

விடுமுறை: மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலிலுக்கு கூடுதல் பக்தா்கள் வருகை

மாநகரில் 3 திட்டச் சாலைகள் அமைப்பதற்கு நிதிக் கோரி அரசுக்கு திட்ட அறிக்கை சமா்பிப்பு

SCROLL FOR NEXT