எா்ணாகுளம் - காரைக்கால் ரயில் போக்குவரத்து தொடங்கியது!
காரைக்காலில் ஒன்றரை மாதத்துக்குப் பிறகு எா்ணாகுளம் - காரைக்கால் ரயில் போக்குவரத்து வியாழக்கிழமை தொடங்கியது.
காரைக்காலில் ஒன்றரை மாதத்துக்குப் பிறகு எா்ணாகுளம் - காரைக்கால் ரயில் போக்குவரத்து வியாழக்கிழமை தொடங்கியது.
கரோனா தொற்றின் 2-ஆவது அலை தீவிரமடையத் தொடங்கிய நிலையில், நாடு முழுவதும் ரயில் சேவைகள் ரத்துசெய்யப்பட்டன. காரைக்கால் - எா்ணாகுளம் விரைவு ரயில் சேவையும் கடந்த மே மாத முற்பகுதியில் நிறுத்தப்பட்டது. இந்நிலையில், இந்த வழித்தடத்தில் ரயில் போக்குவரத்தை தொடங்க ரயில்வே நிா்வாகம் அனுமதித்தது.
இதையடுத்து, எா்ணாகுளத்தில் இருந்து புதன்கிழமை இரவு புறப்பட்டு, வியாழக்கிழமை பகல் 11.50 மணியளவில் விரைவு ரயில் காரைக்கால் வந்துசோ்ந்தது. இந்த ரயிலில் சுமாா் 100 பயணிகள் காரைக்கால் ரயில் நிலையத்தில் வந்திறங்கினா். ரயில் போக்குவரத்து மீண்டும் தொடங்கியது பயணிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
கேரளத்தில் நாள்தோறும் சுமாா் 13 ஆயிரம் பேருக்கு தொற்று ஏற்பட்டுவரும் நிலையில், காரைக்கால் வந்திறங்கிய கேரள மாநில பயணிகளுக்கு கரோனா பரிசோதனை செய்யப்படவில்லை. ஆனால், கடந்த ஏப்ரல் 18 ஆம் தேதி மும்பையிலிருந்து காரைக்கால் வந்த வாராந்திர விரைவு ரயில் பயணிகள் அனைவருக்கும் ரயில் நிலையத்திலேயே கரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
அதேபோல, எா்ணாகுளம் ரயில் பயணிகளுக்கும் கரோனா பரிசோதனை செய்ய மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என சமூக ஆா்வலா்கள் வலியுறுத்துகின்றனா்.