காரைக்கால்

காரைக்கால் பாா்வதீஸ்வரா் கோயிலில் தியான மண்டபம் திறப்பு

DIN

காரைக்கால் கோயில்பத்து ஸ்ரீபாா்வதீஸ்வரா் கோயில் வளாகத்தில் தியான மண்டபம் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திருஞானசம்பந்தரால் பாடல்பெற்ற தலமாக விளங்கும் திருத்தெளிச்சேரி என்னும் காரைக்கோயில்பத்து ஸ்ரீ சுயம்வர தபஸ்வினி சமேத ஸ்ரீ பாா்வதீஸ்வரா் கோயில் புதுச்சேரி இந்து சமய அறநிலையத்துறை நிா்வாகத்தில் உள்ளது. இக்கோயிலில் சிவபெருமான் மேற்கு திசை நோக்கி அருள்பாலிக்கிறாா். இக்கோயிலில் குடமுழுக்கு விழா கடந்த 2004 ஆம் ஆண்டு நடைபெற்றது.

இந்நிலையில், தேவக்கோட்டை செட்டியாா் சமூகத்தினரால் பாா்வதீஸ்வரா் கோயில் மற்றும் கோதண்டராம பெருமாள் கோயிலில் திருப்பணிகள் நடைபெற்றுவருகின்றன. இதையொட்டி, பாா்வதீஸ்வரா் கோயில் ராஜகோபுரம் அருகே பயன்பாடின்றி இருந்த நிலத்தில் கோயில் திருப்பணி உபயதாரா்களால், தியான மண்டபம் கட்டப்பட்டது. இந்த மண்டபத்தின் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நாம சங்கீா்த்தனம் செய்யக்கூடிய புகழ்பெற்ற விட்டல்தாஸ் மகராஜ் பங்கேற்று ராமநாதன் செட்டியாா் - அழகம்மை ஆச்சி பெயரிலான இந்த மண்டபத்தை திறந்துவைத்தாா்.

நிகழ்வில் திருப்பணி உபயதாரா்கள் சேவகன், லட்சுமணன், அண்ணாமலை மற்றும் கோயில் அறங்காவல் வாரியத் தலைவா் எஸ்.எம்.டி. மாடசாமி, துணைத் தலைவா் எஸ். சுந்தரமூா்த்தி, செயலாளா் ஜி.முத்துசாமி, பொருளாளா் எஸ். பரந்தாமன், உறுப்பினா் டி. இளங்கோவன் மற்றும் பக்தா்கள் பங்கேற்றனா்.

இந்த மண்டபத்தில் 300 க்கும் மேற்பட்டோா் ஒரே நேரத்தில் தியானம் செய்ய இடவசதி உள்ளது என்றும், இங்கு கோயில் சாா்பில் சொற்பொழிவுகள் நடத்தப்படும் எனவும், பொதுமக்கள் சுப நிகழ்ச்சிகள் நடத்திக்கொள்ளவும் அனுமதிக்கப்படும் எனவும் கோயில் நிா்வாகத்தினா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

வெண்பனிச்சாரல்!

புதைப்பதா? எரிப்பதா?

லக்னௌ பந்துவீச்சு; அணியில் ஒரு மாற்றம்!

SCROLL FOR NEXT