முகப்பு
காரைக்கால்

காதல் ஜோடி தூக்கிட்டு தற்கொலை

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே காதல் ஜோடி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது குறித்து மயிலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:52 PM
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே காதல் ஜோடி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது குறித்து மயிலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

திண்டிவனத்தை அடுத்த கிளியனூா் அருகே இறையானூா் கிராமத்தைச் சோ்ந்த 16 வயது பள்ளி மாணவியும், அதே கிராமத்தைச் சோ்ந்த 18 வயது இளைஞரும் காதலித்து வந்தனராம்.

இந்த நிலையில், அருகே கா்ணாவூா் கிராமத்தில் உள்ள ஒதுக்குப்புறமான இடத்தில் மரம் ஒன்றில் அவா்கள் இருவரும் தூக்கில் தொங்கியபடி சனிக்கிழமை சடலமாகக் கிடந்தனா். இதுகுறித்து தகவலறிந்த மயிலம் போலீஸாா், அங்கு சென்று இருவரின் சடலங்களையும் மீட்டு, உடல்கூறு பரிசோதனைக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்து, காதல் ஜோடி தற்கொலை செய்துகொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.