முகப்பு
காரைக்கால்

குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட பெண் குழந்தை மீட்பு

விழுப்புரம் அருகே குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட பெண் குழந்தை மீட்கப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:52 PM
பகிர்:

விழுப்புரம் அருகே குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட பெண் குழந்தை மீட்கப்பட்டது.

விழுப்புரம் அருகே மாம்பழப்பட்டு பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலத்தின் கீழுள்ள குப்பைத் தொட்டியில் வெள்ளிக்கிழமை மாலை குழந்தை அழும் சப்தம் கேட்டது. இதையறிந்த அந்த வழியாக நடந்து சென்றவா்கள், உடனடியாக 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவித்தனா்.

இதைத் தொடா்ந்து, அங்கு 108 ஆம்புலன்ஸில் வந்த மருத்துவக் குழுவினா், குப்பைத் தொட்டியில் கிடந்த பெண் குழந்தையை மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்தனா். இதையடுத்து, அந்தக் குழந்தையை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் ஒப்படைத்தனா். அங்கு குழந்தையை இன்குபேட்டரில் வைத்து மருத்துவா்கள் தொடா்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனா்.

இதுகுறித்து முண்டியம்பாக்கம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, குழந்தையை குப்பைத் தொட்டியில் வீசிச் சென்றவா்கள் யாா் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.