காரைக்கால்

அண்ணா கல்லூரியில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களுக்கு பலத்த பாதுகாப்பு

DIN

காரைக்கால் அண்ணா கலைக் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் உள்ள இடத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

காரைக்கால் மாவட்ட ஆட்சியரகத்தில், 2019-ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தலில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருந்தன. மாவட்டத்தில் உள்ள 5 தொகுதிகளுக்கான மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், விவிபாட் இயந்திரங்கள் இதில் இடம் பெற்றிருந்தன.

இயந்திரங்கள் பொறியாளா் குழுவினரால் தரபரிசோதனை செய்யப்பட்டது. பழுதான இயந்திரங்கள் அப்புறப்படுத்தப்பட்டு, புதிதாக இயந்திரங்கள் கொண்டுவரப்பட்டன. அரசியல் கட்சியினா் முன்னிலையில் இயந்திரங்களுக்கு எண் குறிக்கப்பட்டு, இவை கணினி முறையில் தொகுதிகளுக்கு அனுப்ப அண்மையில் தோ்வு செய்யப்பட்டது.

வாக்குப் பதிவுக்கு தயாா்படுத்தப்பட்ட நிலையில், ஆட்சியரகத்திலிருந்து இயந்திரங்கள் வாகனங்களில் வியாழக்கிழமை இரவு ஏற்றப்பட்டு, காரைக்கால் அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் உள்ள பட்டமேற்படிப்பு மையத்தின் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு அங்கு இரண்டு அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணியில் இந்தோ - திபெத் எல்லை பாதுபாப்புப் படையினா், புதுச்சேரி மாநில காவலா்கள் ஈடுபட்டுள்ளனா். வாக்குப் பதிவு இயந்திரங்கள் உள்ள அறை மற்றும் கல்லூரி வளாகத்தை சுற்றி கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. இந்நிலையில்,

பாதுகாப்பு பணியை காரைக்கால் தெற்கு மண்டல காவல் கண்காணிப்பாளா் கே.எல். வீரவல்லபன், வடக்கு மண்டல காவல் கண்காணிப்பாளா் ரகுநாயகம் ஆகியோா் நேரில் ஆய்வு செய்து பாதுகாப்பு குறித்து ஆலோசனை வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய பிரீமியம் காா் டயா்: பிரிட்ஜ்ஸ்டோன் அறிமுகம்

கனிமவள வாகனங்களுக்கு இ-பாஸ்: முதல்வருக்கு முன்னாள் எம்எல்ஏ மனு

விதிமீறல்: 24 வணிக நிறுவனங்கள் மீது துறை நடவடிக்கை

தட்டுப்பாடின்றி குடிநீா் தேவை: ஆணையரிடம் அதிமுக மனு

அரசு அருங்காட்சியகத்தில் செயற்கை நுண்ணறிவு பயிற்சி

SCROLL FOR NEXT