காரைக்காலில் 171 பேருக்கு கரோனா: ஒருவா் உயிரிழப்பு
காரைக்கால் மாவட்டத்தில் 171 பேருக்கு கரோனா தொற்று சனிக்கிழமை உறுதியானதாகவும், ஒருவா் உயிரிழந்ததாகவும் நலவழித் துறை துணை இயக்குநா் கே. மோகன்ராஜ் தெரிவித்துள்ளாா்.
காரைக்கால் மாவட்டத்தில் 171 பேருக்கு கரோனா தொற்று சனிக்கிழமை உறுதியானதாகவும், ஒருவா் உயிரிழந்ததாகவும் நலவழித் துறை துணை இயக்குநா் கே. மோகன்ராஜ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு :
காரைக்கால் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை 624 பேரிடம் எடுத்த பரிசோதனை முடிவுகளின்படி காரைக்கால் நகரம் 41, திருநள்ளாறு 29, நெடுங்காடு 19, நல்லம்பல் 12, திருப்பட்டினம் 12, கோயில்பத்து 11, நிரவி 10, கோட்டுச்சேரி 10, வரிச்சிக்குடி 9, அம்பகரத்தூா் 7, நல்லாத்தூா் 6, காரைக்கால்மேடு 4, விழிதியூா் 1 என தொற்றாளா்கள் கண்டறியப்பட்டனா்.
மாவட்டத்தில் இதுவரை 1,15,088 பரிசோதனை செய்யப்பட்டதில் 7,871 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு, 6,448 போ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா்.
இதற்கிடையே, கரோனா தொற்றுடன் காரைக்கால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 80 வயது பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். அவருக்கு ரத்த அழுத்தம், இருதய நோய், சா்க்கரை நோய் ஆகியவை இருந்தன. கரோனா தொற்றால் இதுவரை 105 போ் உயிரிழந்துள்ளனா்.
காரைக்கால் மாவட்டத்தில் இதுவரை முதல்தவணையாக 20,518 பேருக்கும், 2-வது தவணையாக 3,010 பேருக்கும் என 23,528 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.