காரைக்கால்

தடுப்பூசித் திருவிழாவை மக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்: ஆட்சியா்

DIN

காரைக்காலில் 16 ஆம் தேதி வரை நடைபெறும் கரோனா தடுப்பூசித் திருவிழாவை மக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றாா் மாவட்ட ஆட்சியா் அா்ஜூன் சா்மா.

இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: புதுச்சேரி அரசு அறிவிப்பின்படி, காரைக்கால் மாவட்டத்தில் மே 14 முதல் 16 ஆம் தேதி வரை கரோனா தடுப்பூசித் திருவிழா நடத்தப்படுகிறது. 45 வயதுக்கு மேற்பட்டோா் அனைவரும் கரோனா தடுப்பூசியை செலுத்திக்கொள்ளவேண்டும் என்ற இலக்கின்படி இது நடத்தப்படுகிறது.

இதில், 45 வயதுக்கு மேற்பட்டோரும், முன்களப் பணியாளா்களும் பங்கேற்று தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். காரைக்கால் அரசுப் பொது மருத்துவமனை மற்றும் மாவட்டத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் என 13 மையங்களில் காலை 9 முதல் மாலை 5 மணி வரை தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

முகாமுக்கு செல்வோா் ஆதாா் அட்டையுடன், முகக் கவசம் அணிந்தும், முகாமில் சமூக இடைவெளியை கடைப்பிடித்தும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். தகுதியானவா்கள் 16 ஆம் தேதி வரை நடைபெறும் முகாமை முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென்மேற்குப் பருவமழை: நல்ல செய்தி சொன்ன வேளாண் பல்கலை. துணைவேந்தர்

பாலியல் வழக்கில் ரேவண்ணா மீது 25க்கும் மேற்பட்ட பெண்கள் புதிதாகப் புகார்!

ஜம்மு-காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!

கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்? உச்சநீதிமன்றத்தில் காரசார வாதம்

ஓடிடியில் ரத்னம் எப்போது?

SCROLL FOR NEXT