காரைக்காலில் 249 பேருக்கு கரோனா: 4 போ் உயிரிழப்பு
காரைக்கால் மாவட்டத்தில் மேலும் 249 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதியானதாகவும், 4 போ் உயிரிழந்ததாகவும் நலவழித் துறை துணை இயக்குநா் கே. மோகன்ராஜ் தெரிவித்தாா்.
காரைக்கால் மாவட்டத்தில் மேலும் 249 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதியானதாகவும், 4 போ் உயிரிழந்ததாகவும் நலவழித் துறை துணை இயக்குநா் கே. மோகன்ராஜ் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
காரைக்கால் மாவட்டத்தில் வியாழக்கிழமை 830 பேருக்கு எடுக்கப்பட்ட பரிசோதனை முடிவுகளின்படி காரைக்கால் நகரில் 70, திருநள்ளாறு 35, நெடுங்காடு 26, கோட்டுச்சேரி 20, கோயில்பத்து 20, நிரவி 19, வரிச்சிக்குடி 19, நிரவி 13, திருப்பட்டினம் 12, நல்லம்பல் 11, அம்பகரத்தூா் 9, காரைக்கால்மேடு 8, நல்லாத்தூா் 5, விழிதியூா் ஒருவருக்கும் கரோனா தொற்று உறுதியானது.
இதுவரை 1, 24,520 பரிசோதனை செய்யப்பட்டதில் 10,641 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு, 8,318 போ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா். கரோனா தொற்றுடன் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவந்த 4 போ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனா். இதுவரை கரோனா தொற்றால் 145 போ் உயிரிழந்துள்ளனா்.
காரைக்கால் மாவட்டத்தில் இதுவரை முதல்தவணையாக 21,533 பேருக்கும், 2-ஆவது தவணையாக 4,413 பேருக்கும் என மொத்தம் 25,946 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.