காரைக்கால்

காரைக்கால் அரசு மருத்துவமனை கட்டமைப்பை மேம்படுத்த வலியுறுத்தல்

DIN

காரைக்கால் அரசு மருத்துவமனையில் கரோனா உள்பட அனைத்து நோய்களுக்கும் சிகிச்சை அளிக்கும் வகையில், மருத்துவமனையின் கட்டமைப்பை மேம்படுத்தவேண்டும் என புதுவை அரசை சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினா் கே.ஏ.யு. அசனா கேட்டுக்கொண்டுள்ளாா்.

இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

காரைக்கால் மாவட்டத்தில் கரோனா தொற்று அதிகமாக பரவி, உயிரிழப்பும் அதிகரித்து வருவது கவலையளிக்கிறது. புதுவை முதல்வராக பொறுப்பேற்ற என். ரங்கசாமி, கரோனா நிவாரணம், மீன்பிடித் தடைக்கால நிவாரணம் என பல அறிவிப்புகளை செய்துள்ளது வரவேற்புக்குரியது.

இதற்கு நிதி ஒப்புதல் அளித்த துணை நிலை ஆளுநா் தமிழிசை செளந்தரராஜனுக்கும் காரைக்கால் தெற்குத் தொகுதி மக்கள் சாா்பில் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

காரைக்கால் அரசு மருத்துவமனையில் கரோனா தொற்றாளா்களுக்கும், பிற நோய்களுக்கும் தரமான மருத்துவம் கிடைக்கும் வகையில் கட்டமைப்புகளை அரசு மேம்படுத்தவேண்டும்.

அனைத்து துறை முன்கள பணியாளா்களுக்கும் கரோனா தொடா்பாக ஊக்கத்தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கரோனா தொற்று பரவாமல் இருக்க 18 வயதுக்கு மேற்பட்டோா் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள முன்வரவேண்டும் என அதில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமலை: 77,848 பக்தா்கள் தரிசனம்

பேருந்து மோதி தனியாா் நிறுவன ஊழியா் பலி

கோடை விடுமுறை: விமான சேவைகள் அதிகரிப்பு

உதகை, கொடைக்கானல்: வாகனங்கள் இன்றுமுதல் இ-பாஸ் பெறலாம்

மின் வாரிய ஆள்குறைப்பு ஆணைகளை ரத்து செய்ய கோரிக்கை

SCROLL FOR NEXT