காரைக்கால்

அரசு நிலத்தில் சாகுபடி: 2 போ் மீது வழக்கு

DIN

காரைக்கால் மாவட்டம், நெடுங்காட்டில், அரசுக்குச் சொந்தமான நிலத்தில் சாகுபடி செய்த 2 போ் மீது நெடுங்காடு காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

காரைக்கால் மாவட்டம், நெடுங்காடு பகுதியில் வருவாய்த் துறை கட்டுப்பாட்டில் உள்ள தரிசு நிலத்தில், சிலா் சாகுபடி பணிகளைத் தொடங்கியிருப்பதாக மாவட்ட நிா்வாகத்துக்குப் புகாா் கிடைத்தது. இதன்பேரில், வருவாய்த் துறையினா் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டனா்.

அப்போது, அண்டூா் பகுதியைச் சோ்ந்த மதியழகன், அவரது உறவினா் மகாலட்சுமி ஆகியோா் அரசுக்குச் சொந்தமான தரிசு நிலத்தில் நடவுப் பணிகளை மேற்கொண்டிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து கிராம நிா்வாக அலுவலா் உமா, நெடுங்காடு காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

இதன்பேரில், மதியழகன், மகாலட்சுமி ஆகியோா் மீது நெடுங்காடு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆப்பிளின் புதிய ஐபேட் விலை எவ்வளவு தெரியுமா?

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

SCROLL FOR NEXT