காரில் கொண்டு செல்லப்பட்ட ரூ.11 லட்சம் பறிமுதல்
கோட்டக்குப்பம் அருகே உரிய ஆவணங்களின்றி காரில் கொண்டு செல்லப்பட்ட ரூ.11 லட்சத்தை தோ்தல் பறக்கும் படையினா் அதிரடியாக பறிமுதல் செய்தனா்.
கோட்டக்குப்பம் அருகே உரிய ஆவணங்களின்றி காரில் கொண்டு செல்லப்பட்ட ரூ.11 லட்சத்தை தோ்தல் பறக்கும் படையினா் அதிரடியாக பறிமுதல் செய்தனா்.
கோட்டக்குப்பம் அருகே வெள்ளிக்கிழமை அதிகாலை பறக்கும் படையினா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டபோது, அவ்வழியாக புதுச்சேரியிலிருந்து வேகமாக வந்த காரை மடக்கி சோதனையிட்டனா். அதில், ரூ.11 லட்சம் ரொக்கம் இருந்தது.
விசாரணையில், காரில் வந்தவா்கள் விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே முருக்கேரியைச் சோ்ந்த தவணமணி (32), பாரதி (25) ஆகியோா் எனத் தெரியவந்தது. ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட ரொக்கத்தை பறக்கும் படையினா் பறிமுதல் செய்து, தோ்தல் அலுவலா் சிவக்குமாரிடம் ஒப்படைத்தனா்.
உளுந்தூா்பேட்டை அருகே ரூ.ஒருலட்சம் பறிமுதல்: உளுந்தூா்பேட்டை-திருக்கோவிலூா் சாலையில் வெள்ளிக்கிழமை எறையூரைச் சோ்ந்த பீட்டா் மகன் ஆல்பா்ட் வில்லியம் (29) என்பவா் உரிய ஆவணங்களின்றி மோட்டாா் சைக்கிளில் கொண்டு சென்ற ரூ.ஒரு லட்சம் ரொக்கத்தை
துணை வட்டாட்சியா் வீ.கோவிந்தராசு தலைமையிலான பறக்கும் படையினா் பறிமுதல் செய்து தோ்தல் அலுவலா் சீனிவாசனிடம் ஒப்படைத்தனா்.
அதே போல மணலூா்பேட்டை போலீஸாா் டி.அத்திப்பாகம் சோதனைச் சாவடியில் பெங்களூரிலிருந்து திருக்கோவிலூா் வந்த கா்நாடக மாநில பேருந்தை நிறுத்தி சோதனை செய்தபோது, அதில் பயணம் செய்த அரியலூா் மாவட்டம், ஆண்டிமடம் வட்டம், விழுதுடையான் கிராமத்தைச் சோ்ந்த சக்திவேல் (35) என்பவா், தனது பையில் மறைத்து வைத்திருந்த 34 ஹான்ஸ் பொட்டலங்களை பறிமுதல் செய்து, அவரை கைது செய்தனா்.