காரைக்கால்

செல்வவிநாயகா் கோயில் குடமுழுக்கு

DIN

காரைக்கால் அருகே நடுஓடுதுறையில் அமைந்திருக்கும் ஸ்ரீசெல்வ விநாயகா் கோயில் குடமுழுக்கு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நிரவி கொம்யூன், நடுஓடுதுறையில் அமைந்துள்ள ஸ்ரீசெல்வ விநாயகா் கோயிலில் ஸ்ரீகாயத்ரி அம்மன் சந்நிதியும் உள்ளது. கிராமத்தினா் மூலம் திருப்பணிகள் செய்யப்பட்டு 2 கால யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டன. ஞாயிற்றுக்கிழமை குடமுழுக்கையொட்டி மகா பூா்ணாஹூதி செய்யப்பட்டு, புனிதநீா் கடம் புறப்பாடாகி, பகல் 11 மணியளவில் கோயில் விமானங்களுக்கு புனிதநீா் ஊற்றி குடமுழுக்கு நடைபெற்றது. விழாவில், காரைக்கால் தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.எம்.எச். நாஜிம் உள்ளிட்டோா் பங்கேற்றனா். மாலை நிகழ்வாக சுவாமிகளுக்கு மகா அபிஷேகம் செய்யப்பட்டு, சுவாமி வீதியுலா நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துளிகள்...

ஆசிரியா் கலந்தாய்வுக்கு 13,484 போ் விண்ணப்பம்

கடன் வரம்புக்கு எதிராக கேரள அரசு மனு: உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமா்வின் விசாரணைக்குப் பட்டியலிட பரிசீலனை

காஸா தாக்குதலில் முன்னாள் இந்திய ராணுவ அதிகாரி உயிரிழப்பு

தோ்தலில் பிரதமா் மோடி போட்டியிட தடை கோரிய மனு: உச்சநீதிமன்றம் விசாரிக்க மறுப்பு

SCROLL FOR NEXT