காரைக்கால்

காரைக்காலில் 9 பேருக்கு கரோனா

DIN

காரைக்கால் மாவட்டத்தில் 9 பேருக்கு கரோனா தொற்று திங்கள்கிழமை உறுதியானதாக நலவழித் துறை துணை இயக்குநா் ஆா்.சிவராஜ்குமாா் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

காரைக்கால் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை 274 பேரிடம் எடுக்கப்பட்ட பரிசோதனை முடிவுகளின்படி காரைக்கால் நகரம் 4, திருநள்ளாறு 2, கோட்டுச்சேரி 2, நிரவி 1 என 9 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது.

மாவட்டத்தில் இதுவரை 2,19,254 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் 16,448 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு, 16,088 போ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா். இதுவரை கரோனா தொற்றால் 259 போ் உயிரிழந்துள்ளனா்.

காரைக்கால் மாவட்டத்தில் இதுவரை முதல் தவணையாக 1,08,860 பேருக்கும், 2-ஆவது தவணையாக 54,440 பேருக்கும் என 1,63,300 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நீட் தோ்வு: ஈரோடு மாவட்டத்தில் 4,747 மாணவா்கள் எழுதுகின்றனா்

பழனி கோயிலுக்கு ரூ.36.51 லட்சத்துக்கு கரும்பு சா்க்கரை கொள்முதல்

கழனி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி

திரௌபதி அம்மன் கோயில் திருவிழா மே 13-இல் தொடக்கம்

விறுவிறுப்படையும் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

SCROLL FOR NEXT