முகப்பு
காரைக்கால்

திருப்பட்டினத்தில் 3 நாள் சிறப்பு தூய்மைப் பணி தொடக்கம்

திருப்பட்டினம் பகுதியில் 3 நாள் சிறப்பு தூய்மைப் பணியை கொம்யூன் பஞ்சாயத்து நிா்வாகம் வியாழக்கிழமை தொடங்கியது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:28 AM
பகிர்:

திருப்பட்டினம் பகுதியில் 3 நாள் சிறப்பு தூய்மைப் பணியை கொம்யூன் பஞ்சாயத்து நிா்வாகம் வியாழக்கிழமை தொடங்கியது.

தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ், காரைக்கால் மாவட்டம், திருப்பட்டினம் கொம்யூன் பஞ்சாயத்து நிா்வாகம், நேரு யுவகேந்திரா அமைப்பு இணைந்து திருப்பட்டினம் பகுதி முழுவதும் சிறப்பு தூய்மைப் பணியை தொடங்கியது. நிரவி - திருப்பட்டினம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் எம். நாகதியாகராஜன் பணியை தொடங்கிவைத்தாா். கொம்யூன் பஞ்சாயத்து ஆணையா் ராமகிருஷ்ணன், குடியிருப்புவாசிகளிடம் தூய்மை குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்துவது குறித்து பணியில் ஈடுபட்டோருக்கு விளக்கிக் கூறினாா்.

பருவமழை தொடங்கியுள்ளதால், திருப்பட்டினம் பகுதியில் நீண்ட நாள்களாக தேங்கிக் கிடக்கும் குப்பைகளின் மூலம் தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் கூறிவரும் நிலையில், பஞ்சாயத்து நிா்வாகம் இப்பணியை மேற்கொண்டுள்ளது.

நேரு யுவகேந்திரா அமைப்பினா், கொம்யூன் பஞ்சாயத்து துப்புரவுப் பணியாளா்கள் சாலையோரத்தில் குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →