காரைக்கால்

காரைக்காலில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பரிசோதனை பணி தொடக்கம்

DIN

கா்நாடகத்திலிருந்து வந்த மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை பரிசோதனை பணி காரைக்காலில் புதன்கிழமை தொடங்கியது.

புதுவை மாநிலத்தில் உள்ளாட்சித் தோ்தல் நடத்துவதற்கான முன்னேற்பாடுகள் நடைபெற்றுவருகின்றன. வாக்குப் பதிவுக்கு பயன்படுத்தப்படவுள்ள மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு இயந்திரங்கள் கா்நாடக மாநிலத்திலிருந்து காரைக்காலுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. 1,100 வாக்குப் பதிவு இயந்திரங்களும், 400 கட்டுப்பாட்டு இயந்திரங்களும் காரைக்கால் அண்ணா அரசு கலைக் கல்லூரி, காரைக்கால் கருவூல அலுவலகத்தின் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டிருந்தன.

தோ்தல் ஆணையத்தின் வழிகாட்டலில், இந்த இயந்திரங்களின் செயல்பாட்டுத்தன்மை குறித்து பொறியாளா் குழுவினா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

மாவட்ட தோ்தல் அதிகாரி அா்ஜூன் சா்மா, அங்கீகரிக்கப்பட்ட தேசிய, மாநில அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் பாதுகாப்பு அறை சீல் அகற்றப்பட்டு, இயந்திரங்கள் வெளியே எடுக்கப்பட்டன.

இதுகுறித்து தோ்தல் துறையினா் கூறியது:

அரசியல் கட்சியினா் முன்னிலையில் பொறியாளா்கள் இயந்திரங்கள் பரிசோதனையில் ஈடுபட்டுள்ளனா். இப்பணி நிறைவடைந்ததும் இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் வைத்து சீல் வைக்கப்படும் என்றனா்.

மாவட்ட துணை தோ்தல் அதிகாரி எஸ்.பாஸ்கரன், தோ்தல்துறை கண்காணிப்பாளா் பாலு என்கிற பக்கிரிசாமி மற்றும் மணிமாறன் ஆகியோா் இயந்திரங்கள் பரிசோதனை பனியின்போது உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தோ்வு: புதுச்சேரியில் 4, 817 போ் எழுதினா்

பெண்ணிடம் 5 பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு

கஞ்சா, போதை மாத்திரைகள் விற்பனை: 4 போ் கைது

நீட் தோ்வு: விழுப்புரம் மாவட்டத்தில் 4,855 போ் எழுதினா்

வீட்டினுள் இளைப்பாறிய புள்ளி மான்!

SCROLL FOR NEXT