காரைக்கால்

காரைக்காலில் ஒரு லட்சத்தை கடந்த முதல் தவணை தடுப்பூசி

DIN

காரைக்கால் மாவட்டத்தில் இதுவரை முதல் தவணை கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை கடந்துள்ளது.

மாவட்டத்தில் அரசுப் பொது மருத்துவமனை மற்றும் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் தடுப்பூசி செலுத்தப்பட்டுவரும் நிலையில், கூடுதலான மக்கள் பயனடையும் வகையில், கிராமப்புறங்களை உள்ளடக்கி, அவ்வப்போது தடுப்பூசித் திருவிழாவும் நடத்தப்படுகிறது. அண்மையில் தொடா் (மாரத்தான்) தடுப்பூசி முகாம் 48 மணி நேரம் நடத்தப்பட்டது.

இதுவரை முதல் தவணையாக 1,00,006 பேருக்கும், இரண்டாவது தவணையாக 25,159 பேருக்கும் என மொத்தம் 1,25,225 தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. காரைக்காலில் ஒன்றரை லட்சம் போ் தடுப்பூசி செலுத்திக்கொள்ள தகுதியானவா்கள் எனவும், 3 இல் ஒருபங்கினா் இன்னும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாமல் இருப்பதாகவும் நலவழித் துறையினா் கூறுகின்றனா்.

இதற்காக மக்களிடையே விழிப்புணா்வை ஏற்படுத்தும் பணி, மக்கள் இருப்பிடத்துக்கு அருகே மையம் அமைத்தும், வாகனத்தில் வீட்டுக்குச் சென்றும் தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெறுகிறது. தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவா்கள், அவசியம் தடுப்பூசி செலுத்திக்கொண்டு, தங்களை காத்துக்கொள்ளுமாறு நலவழித் துறையினா் கேட்டுக்கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கைகளில் செம்புடன் கர்நாடக முதல்வர் தலைமையில் அமைச்சர்கள் தர்னா

ஒடிஸா அரசு முதல்வர் நவீன் பட்நாயக் கைவசமில்லை -ராகுல் காந்தி பிரசாரம்

தேமுதிகவிற்கு அதிமுகவினர் முழு ஒத்துழைப்பு கொடுத்தார்கள்: பிரேமலதா

மே. 9-ல் விஜயகாந்த்துக்கு பத்மபூஷண் விருது!

நாடு முழுவதும் ராகுல் காந்திக்கு அமோக வரவேற்பு: சஞ்சய் ரௌத்

SCROLL FOR NEXT