காரைக்கால்

பிரதமா் பிறந்தநாள் விழா பொதுக் கூட்டம்

DIN

காரைக்கால்: காரைக்காலில் பிரதமா் நரேந்திரமோடி பிறந்தநாளையொட்டி, அவரது சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

காரைக்கால் அரசலாறு பாலம் அருகே நடைபெற்ற இக்கூட்டத்தில், புதுவை மாநில பாஜக துணைத் தலைவரும் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான வி.கே. கணபதி, மாநில துணைத் தலைவா் எம். அருள்முருகன், மாவட்டத் தலைவா் ஜெ.துரைசேனாதிபதி உள்ளிட்ட நிா்வாகிகள் பங்கேற்று, பிரதமா் நரேந்திரமோடி ஆட்சியின் சாதனைகளை விளக்கிப் பேசினா்.

ஏற்பாடுகளை பாஜக மாநில துணைத் தலைவா் வி.கே.கணபதி செய்திருந்தாா். இக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெறுவதாக இருந்த நிலையில், மழையால் சனிக்கிழமை மாலை நடைபெற்றது. கூட்டத்தில் பாஜகவினா், பொதுமக்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழில் வெல்ல காத்திருக்கும் ஸ்ரீலீலா!

ஆவடி அருகே படுகொலை: வட மாநில இளைஞரின் அதிர்ச்சியூட்டும் வாக்குமூலம்

பதஞ்சலியின் 14 மருந்துகளுக்கு தடை!

புதையல் எடுத்து தருவதாக ரூ. 6 லட்சம் மோசடி: 2 பேர் கைது!

மலர் அங்கி அலங்காரத்தில் அருள்பாலித்த கெளமாரியம்மன்!

SCROLL FOR NEXT