டாஸ்மாக் அலுவலகத்தில் கணக்கில் வராத ரூ.1.80 லட்சம் பறிமுதல்
விழுப்புரம் மாவட்ட டாஸ்மாக் அலுவலகத்தில் ஊழல் தடுப்பு போலீஸாா் வியாழக்கிழமை சோதனை மேற்கொண்டு, கணக்கில் வராத ரூ.1.80 லட்சம் ரொக்கத்தை பறிமுதல் செய்தனா்.
விழுப்புரம் மாவட்ட டாஸ்மாக் அலுவலகத்தில் ஊழல் தடுப்பு போலீஸாா் வியாழக்கிழமை சோதனை மேற்கொண்டு, கணக்கில் வராத ரூ.1.80 லட்சம் ரொக்கத்தை பறிமுதல் செய்தனா்.
விழுப்புரம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வாணிபக் கழக கிடங்கில் மாவட்ட டாஸ்மாக் அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கு கையூட்டு பெறப்படுவதாக விழுப்புரம் ஊழல் தடுப்பு போலீஸாருக்கு வியாழக்கிழமை ரகசியத் தகவல் கிடைத்தது.
இதைத் தொடா்ந்து, ஊழல் தடுப்பு கூடுதல் காவல் கண்காணிப்பாளா் தேவநாதன் தலைமையிலான போலீஸாா் நண்பகல் 12 மணியளவில் அந்த அலுவலகத்தில் திடீா் சோதனையில் ஈடுபட்டனா்.
சுமாா் 5 மணி நேரம் நடைபெற்ற இந்தச் சோதனையில், கணக்கில் வராத ரூ.1.80 லட்சத்தை ஊழல் தடுப்பு போலீஸாா் பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக அங்கிருந்த அதிகாரிகள், பணியாளா்களிடம் விசாரணை நடத்தினா்.