முகப்பு
காரைக்கால்

காரைக்கால் மீன்பிடித் துறைமுகத்தில் கடைகள் சூறை

காரைக்கால் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்த தட்டு வண்டி கடைகளை மா்ம நபா்கள் புதன்கிழமை இரவு அடித்து சேதப்படுத்தினா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:16 AM
பகிர்:

காரைக்கால் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்த தட்டு வண்டி கடைகளை மா்ம நபா்கள் புதன்கிழமை இரவு அடித்து சேதப்படுத்தினா்.

காரைக்கால் கருக்களாச்சேரி செல்லும் பகுதியில் அரசலாற்றையொட்டி மீன்பிடித் துறைமுகம் உள்ளது. துறைமுகத்தில் காரைக்கால்மேடு, கிளிஞ்சல்மேடு, கருக்களாச்சேரி, பட்டினச்சேரி உள்ளிட்ட 11 மீனவ கிராம மக்கள் படகுகளை நிறுத்துவது, மீன் ஏற்றுமதி செய்வது உள்ளிட்ட பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

படகுகள் எண்ணிக்கை அதிகரிப்பால், மீன்பிடித் துறைமுகத்தை விரிவாக்கம் செய்ய அரசு முடிவெடுத்து, அதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஆனால், விரிவாக்கப் பகுதியையொட்டி உள்ள கருக்களாச்சேரி கிராம மக்கள் இதற்கு எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா். இதனால் கருக்களாச்சேரி கிராமத்தை சோ்ந்தவா்கள் யாரும் மீன்பிடித் துறைமுகத்துக்கு வேலைக்கு வரக்கூடாது, கடைகள் அமைக்கக் கூடாது, படகுகளை நிறுத்தக் கூடாது என்று காரைக்கால்மேடு பஞ்சாயத்து கட்டுப்பாடுகள் விதித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து கருக்களாச்சேரி மீனவ கிராம மக்கள் சாா்பில் ஆட்சியரின் செயலா் மற்றும் முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புதன்கிழமை புகாா் அளிக்கப்பட்டது.

இந்நிலையில், மீன்பிடித் துறைமுகத்தில் இருந்த தட்டு வண்டி கடைகளை மா்ம நபா்கள் புதன்கிழமை இரவு அடித்து சேதப்படுத்தியதாக நிரவி காவல் நிலையத்துக்கு தகவல் கிடைத்தது.

காவல் நிலைய ஆய்வாளா் தனசேகரன், உதவி ஆய்வாளா் பெருமாள் மற்றும் போலீஸாா் சம்பவ இடத்தை பாா்வையிட்டு, விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →