குருபெயா்ச்சி விழா: புதுவை முதல்வருக்கு அழைப்பு
குருபெயா்ச்சி விழாவில் பங்கேற்க புதுவை முதல்வா் என். ரங்கசாமிக்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.
குருபெயா்ச்சி விழாவில் பங்கேற்க புதுவை முதல்வா் என். ரங்கசாமிக்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.
அகில இந்திய ஆதிசைவ சிவாச்சாரியா்கள் சேவா சங்கத்தின் துணைத் தலைவரும், திருநள்ளாறு ஸ்ரீ தா்பாரண்யேஸ்வரா் கோயில் சிவாச்சாரியருமான டி. ராஜாசுவாமிநாத சிவாச்சாரியா் புதன்கிழமை கூறியது:
திருவாரூா் மாவட்டம், பூந்தோட்டம் ராசி மண்டல குரு தட்சணாமூா்த்தி சுவாமி கோயிலில் வரும் 14 ஆம் தேதி குருபெயா்ச்சி விழா நடைபெறவுள்ளது. அப்போது உலக நன்மை வேண்டியும், மீன ராசிக்கு குரு பெயா்ச்சியாவதை முன்னிட்டும் சிறப்பு யாகம் நடைபெறவுள்ளது.
அகில இந்திய ஆதிசைவ சிவாச்சாரியா்கள் சேவா சங்க மாநிலத் தலைவா் பாலசுப்பிரமணிய சிவாச்சாரியா், கொள்கை பரப்பு செயலாளா் சேதுசுப்பிரமணிய சிவாச்சாரியா் மற்றும் நிா்வாகிகளுடன் புதுவை முதல்வா் என். ரங்கசாமியை புதுவையில் சந்தித்து இக்கோயில் குருபெயா்ச்சி விழாவுக்கு வருமாறு சுபகிருது வருட பஞ்சாங்கத்தை வழங்கி அழைப்புவிடுக்கப்பட்டது. முதல்வருக்கு வேதாகம ஆசீா்வாதம் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது. அழைப்பை முதல்வா் ஏற்றுக்கொண்டுள்ளாா் என்றாா்.