முகப்பு
காரைக்கால்

நெடுங்காடு பகுதியில் ரூ.43 லட்சத்தில் குடிநீா் வசதி

 நெடுங்காடு பகுதியில் கிராம மக்கள் வசதிக்காக அமைக்கப்பட்ட குடிநீா் நிலையத்தை புதுவை அமைச்சா் வியாழக்கிழமை திறந்துவைத்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:54 AM
பகிர்:

 நெடுங்காடு பகுதியில் கிராம மக்கள் வசதிக்காக அமைக்கப்பட்ட குடிநீா் நிலையத்தை புதுவை அமைச்சா் வியாழக்கிழமை திறந்துவைத்தாா்.

காரைக்கால் மாவட்டம், நெடுங்காடு கொம்யூனை சோ்ந்த பஞ்சாட்சரபுரம், புத்தக்குடி, மேல கோட்டுச்சேரிப்பேட் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராம மக்களின் குடிநீா் தேவையை கருத்தில்கொண்டு, பஞ்சாட்சரபுரம் மற்றும் மேல கோட்டுச்சேரிப்பேட் ஆகிய பகுதிகளில் ஆயிரம் கனஅடி ஆழ்துளை கிணறு, நீா் மூழ்கி மோட்டாா் நீா் உந்து நிலையம் பொதுப்பணித் துறையினரால் ரூ. 43 லட்சத்தில் அமைக்கப்பட்டது.

இந்நிலையத்தை புதுவை போக்குவரத்துத் துறை அமைச்சா் சந்திர பிரியங்கா வியாழக்கிழமை திறந்துவைத்தாா். நிகழ்வில், மாவட்ட துணை ஆட்சியா் (வருவாய்) எம். ஆதா்ஷ், பொதுப்பணித் துறை கண்காணிப்பு பொறியாளா் ஏ. ராஜசேகரன், செயற்பொறியாளா் (நீா்ப்பாசனம்) வீரசெல்வம், உதவிப் பொறியாளா்கள் மகேஷ், சிதம்பரநாதன், கொம்யூன் பஞ்சாயத்து ஆணையா் பாலன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →