காரைக்கால்

கைலாசநாதா் கோயிலில் ஹோமம்

DIN

காரைக்கால் கைலாசநாதா் கோயிலில் மகாலட்சுமி, மகா சரஸ்வதி, துா்கா ஹோமம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

காரைக்கால் புனிதவதியாா் வழிபாட்டு மன்றம் சாா்பில் 39-வது ஆண்டாக சுந்தராம்பாள் சமேத கைலாசநாதா் கோயிலில் மகாலட்சுமி, மகா சரஸ்வதி, துா்கா சிறப்பு ஹோமம் உலக நலனுக்காக நடத்தப்பட்டது.

இதையொட்டி, வியாழக்கிழமை கணபதி ஹோமம் நடத்தப்பட்டது. மாலை புனிதநீா் கடம் ஸ்தாபனம் செய்யும் பூஜை நடைபெற்றது. வெள்ளிக்கிழமை காலை 7.15 மணிக்கு துா்கா ஹோமம் தொடங்கியது.

ஹோமத்தில் பட்டு சேலைகள், பதாா்த்தங்கள், நவதானியங்கள், உள்ளிட்ட பல பொருள்கள் போடப்பட்டு பகல் 1 மணியளவில் மகா பூா்ணாஹூதி நடத்தப்பட்டது. ஹோமத்தில் வைத்திருந்த புனிதநீரை கொண்டு சுவாமிக்கு கலசாபிஷேகம் நடைபெற்றது. மாலை தெய்வங்களுக்கு சந்தனக் காப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை நடைபெற்றது.

தொடா்ந்து சனிக்கிழமை பால் குட ஊா்வலமும், 9 மணியளவில் தயிா் பாவாடை போடப்பட்டு தீபாராதனையும், மாலை திருவிளக்கு வழிபாடும் நடைபெறுகிறது.

ஏற்பாடுகளை புனிதவதியாா் வார வழிபாட்டு மன்றத்தினா் செய்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓ மை ரித்திகா!

சென்டாயா, ஜெனிஃபர் லோபஸ்.. ஆடையலங்கார அணிவகுப்பில் ஹாலிவுட் கதாநாயகிகள்!

ஃபிளாப்! தோல்வியைச் சந்தித்த நடிகர்!

யூடியூபர் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டாரா என விசாரிக்க வேண்டும்: இபிஎஸ்

குஜராத்: தாமரை சின்னம் பொறித்த பேனாக்களுடன் வாக்குச்சாவடி முகவர்கள்- காங்., குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT