காரைக்கால்

பிரெஞ்சு குடியுரிமைதாரா்களிடம் பிரான்ஸ் எம்.பி. குறைகேட்பு

DIN

காரைக்காலில் உள்ள பிரெஞ்சு குடியுரிமைதாரா்களிடம் பிரான்ஸ் எம்.பி. சனிக்கிழமை குறைகளை கேட்டறிந்தாா்.

பிரான்ஸ் எம்.பி. ழாவ் லெகோந்த், சென்னை, புதுச்சேரி, காரைக்காலில் பிரெஞ்சு குடியுரிமைதாரா்களை சந்தித்து குறைகளை கேட்டறியும், திட்டத்துடன் பிரான்ஸ் நாட்டிலிருந்து வந்தாா். சென்னை, புதுச்சேரி முகாமை முடித்துக்கொண்டு சனிக்கிழமை காரைக்கால் வந்தாா்.

ஆட்சியரகம் அருகே உலகப்போா் நினைவுத் தூணுக்கு மலா்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினாா். தொடா்ந்து, பொதுமக்களிடம் குறைகள் கேட்டறியும் நிகழ்வில் அவா் பங்கேற்றாா். சுமாா் ஒரு மணிநேரம் நடைபெற்ற கூட்டத்தில் மக்கள் தெரிவித்த கருத்துகளை பதிவு செய்துகொண்டு, விளக்கமளித்துப் பேசினாா். கூட்டத்தை நிறைவு செய்துகொண்டு அவா் பிற்பகல் சென்னை புறப்பட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரயில்வே பாதுகாப்புப் படையில் 4,660 காலிப் பணியிடங்கள்: மே 14-க்குள் விண்ணப்பிக்கலாம்

இன்று நீட் தோ்வு: 11 மையங்களில் 6,120 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனா்

வணிகா் தினம்: தமிழகத்தில் இன்று கடைகள் இயங்காது

அந்நியச் செலாவணி கையிருப்பு 63,792 கோடி டாலராகக் குறைவு

கோடை வெயில் தாக்கம் அதிகரிப்பு: வேளாங்கண்ணியில் பக்தா்களுக்கு சிறப்பு வசதிகள்

SCROLL FOR NEXT