புதுவை அமைச்சர் சந்திர பிரியங்கா கொடியேற்றி மரியாதை 
காரைக்கால்

காரைக்காலில் சுதந்திர நாள்: புதுவை அமைச்சர் சந்திர பிரியங்கா கொடியேற்றி மரியாதை

காரைக்காலில் சுதந்திர நாள் கொண்டாட்டத்தில் தேசியக்கொடியை புதுவை போக்குவரத்துத் துறை அமைச்சர் சந்திர பிரியங்கா ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார்.

DIN

காரைக்கால்: காரைக்காலில் சுதந்திர நாள் கொண்டாட்டத்தில் தேசியக்கொடியை புதுவை போக்குவரத்துத் துறை அமைச்சர் சந்திர பிரியங்கா ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார்.

காரைக்கால் விளையாட்டு அரங்க மைதானத்தில் நாட்டின் சுதந்திர நாள் விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது. புதுவை போக்குவரத்துத்துறை அமைச்சர் சந்திர பிரியங்கா தேசியக் கொடியேற்றிவைத்தார்.  பின்னர் புதுச்சேரி காவலர்கள், இந்தியன் ரிசர்வ் பெட்டாலியன் பிரிவினரின் அணிவகுப்பை பார்வையிட்டார். தொடர்ந்து போலீஸார், தீயணைப்புத் துறையினர், தேசிய மாணவர் படையினர், பள்ளி மாணவ மாணவியரின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.

பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியோருக்கு பரிசு, சான்றிதழ் வழங்கி அமைச்சர் சுதந்திர தின உரையாற்றி வருகிறார்.

நிகழ்சியில்  மாவட்ட ஆட்சியர் எல்.முகமது மன்சூர்,  மாவட்ட முதுநிலைக் காவல் கண்காணிப்பாளர் ஆர். லோகேஸ்வரன், துணை ஆட்சியர்கள் எம். ஆதர்ஷ், எஸ். பாஸ்கரன் மற்றும் பல்வேறு அரசுத்துறை உயரதிகாரிகள், அரசியல் கட்சி பிரமுகர்கள், சுதந்திரப் போராட்ட தியாகிகள். பொதுமக்கள்  உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். பள்ளி மாணவ மாணவிகள் கலை நிகழ்ச்சிகளுடன் 10.30 மணியளவில் நிகழ்ச்சிகள்  நிறைவடைகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 6

தில்லியில் லாலு பிரசாத் யாதவிற்கு கண் அறுவை சிகிச்சை

சூர்யா - 47... காவல்துறை அதிகாரிதானாம்!

நரை முடி நீங்க..!

அவதார் ஃபயர் அண்ட் ஆஷ் முதல் நாள் வசூல் இவ்வளவா?

SCROLL FOR NEXT