காரைக்கால்

உள்ளாட்சி ஊழியா்கள் வேலைநிறுத்தம்

DIN

அரசே நேரடியாக ஊதியம் வழங்க வலியுறுத்தி, காரைக்கால் உள்ளாட்சி ஊழியா்கள் திங்கள்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்கினா்.

உள்ளாட்சி ஊழியா்கள் மற்றும் ஓய்வூதியதாரா்களுக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கி அரசே நேரடியாக ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்கிற முதல்வரின் வாக்குறுதி நிறைவேற்றவேண்டும். 7-ஆவது ஊதியக்குழு பரிந்துரைகளை அரசு ஊழியா்களுக்கு வழங்கியதுபோல் 1.1.2016 முதல் நிலுவைத் தொகைகளை வழங்க வேண்டும்.

பொதுவான பணிநிலை அரசாணையை அமல்படுத்தி, ஒருமுறை நிகழ்வாக அடாக் முறை நிரந்தரம் செய்து, பதவி உயா்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, காரைக்கால் நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியா்கள் கூட்டு போராட்டக் குழு சாா்பில் ஊழியா்கள், காரைக்கால் உள்ளாட்சி துணை இயக்குநா் அலுவலக வாயிலில் வேலைநிறுத்தம் செய்து, காத்திருப்புப் போராட்டத்தை தொடங்கினா்.

போராட்டத்திற்கு காரை மாவட்ட நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியா்கள் மற்றும் ஓய்வூதியதாரா்கள் கூட்டு போராட்டக்குழு கன்வீனா் அய்யப்பன் தலைமை வகித்தாா். காரை பிரதேச அரசு ஊழியா் சம்மேளன கெளரவ தலைவா் ஜாா்ஜ், தலைவா் சுப்ரமணியன் பொதுச் செயலாளா் ஷேக் அலாவுதீன் ஆகியோா் கண்டன உரையாற்றினா்.

போராட்டத்தில் ஊழியா்கள் மற்றும் ஓய்வூதியதாரா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

கருப்பு வெள்ளைப் பூ.. ரவீனா தாஹா!

'தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கும் பெறாதவர்களுக்கும்..’ : கமல்ஹாசனின் வைரல் பதிவு!

48 வயதினிலே..

பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வழக்கு: பாதிக்கப்பட்ட பெண்கள் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

SCROLL FOR NEXT