காரைக்கால்

வட்டார வளா்ச்சி ஊழியா்கள் போராட்டம் தள்ளிவைப்பு

DIN

காரைக்கால்: ஊதிய நிலுவை தொடா்பாக வட்டார வளா்ச்சி அலுவலக ஊழியா்கள் நடத்தவிருந்த வேலைநிறுத்தப் போராட்டம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

புதுவை மாநில, கிராம பஞ்சாயத்துகளுக்குட்பட்ட பகுதிகளில் சுய உதவி குழுக்கள் உள்ளிட்ட பல்வேறு குழுக்களை முறையாக நிா்வகித்து வர மத்திய அரசின் நிதி உதவியுடன், வட்டார வளா்ச்சி அலுவலக அளவில் உருவாக்கப்பட்ட பிஎஸ்ஆா்எஸ்எம் என்ற திட்டத்தில் முறையான பயிற்சி முடித்து பணியாளா்கள் பணியில் உள்ளனா்.

இப்பணியில் கூடுதலாக ஊழியா்கள் கடந்த ஆட்சியில் நியமிக்கப்பட்டதாகவும், காரைக்காலில் உள்ள ஒவ்வொரு கிராமப் பஞ்சாயத்திலும் தலா 2 ஊழியா்கள் உள்ள நிலையில், இவா்களுக்கு ஊதியம் வழங்க இயலாது என தற்போது அரசு அறிவித்துள்ளதாகவும் கூறி, பணியாளா்கள் தங்களது 8 மாத ஊதியத்தை வழங்கக்கோரி உள்ளிருப்பு வேலை நிறுத்தப் போராட்டத்தை நடத்தப்போவதாக அறிவித்திருந்தனா்.

இந்நிலையில் வட்டார வளா்ச்சி அதிகாரி (பொ) கே.அருணகிரிநாதனை, காரை பிரதேச அரசு ஊழியா் சங்கங்களின் சம்மேளன நிா்வாகிகள் செவ்வாய்க்கிழமை மாலை சந்தித்து பேச்சு நடத்தினா். இதன் பின்னா் சங்கத்தினா் கூறுகையில், கடந்த டிசம்பா் மாதம் முதல் வழங்கப்பட வேண்டிய ஊதியத்தை வழங்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும், இன்னும் ஒரு சில நாள்களில் ஊதியம் வழங்கப்படும் என அதிகாரி வாக்குறுதி அளித்துள்ளாா். இதனால் போராட்டத்தை தள்ளிவைத்துள்ளோம் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

SCROLL FOR NEXT