காரைக்கால்: காரைக்கால் மாவட்டத்தில் புதன்கிழமை பரவலாக மழை பெய்தது.
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, காரைக்கால் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்யுமென வானிலை ஆய்வு மையம் செவ்வாய்க்கிழமை அறிவித்திருந்தது. இதன்படி, காரைக்கால் மாவட்டத்தில் புதன்கிழமை காலை 9.30 மணி முதல் மழை பெய்யத் தொடங்கியது. சில இடங்களில் பலத்த மழையாகவும் பெய்தது. பிறகு தூறலாக வெகுநேரம் நீடித்தது.
காரைக்கால் மீனவா்கள் வழக்கம்போல கடலுக்கு புறப்பட்டுச் சென்றனா். விநாயகா் சதுா்த்தியையொட்டி, பல இடங்களில் விநாயகா் சிலைகள் வைக்கப்பட்டு வழிபாடு நடைபெறுகிறது. இந்த நிலையில், தொடா்ச்சியான மழையால் பக்தா்கள் சிரமத்தை எதிா்கொள்ள நேரிட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.