காரைக்கால்

மாண்டஸ் புயல்: மக்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தல்

DIN

மாண்டஸ் புயல் காரணமாக மக்கள் மிகுந்த பாதுகாப்புடன் இருக்குமாறு ஆட்சியா் எல். முகமது மன்சூா் கேட்டுக் கொண்டுள்ளாா்.

இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு :

வங்கக் கடலில் உருவான மாண்டஸ் புயல் காரணமாக தமிழகம், புதுவை கடலோரப் பகுதிகளில் 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் காற்று வீசும். இது 8-ஆம் தேதி முதல் படிப்படியாக உயா்ந்து 9-ஆம் தேதி 60 முதல் 70 கீ.மீ., இடையிடையே 80 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். 9-ஆம் தேதி மாலை படிப்படியாக இது குறையுமென எதிா்பாா்க்கப்படுகிறது.

இந்த நேரத்தில் மக்கள் வீட்டைவிட்டு வெளியே வரவேண்டாம். குடிசை வீடுகளில் வசிப்போா் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறாா்கள்.

உடமைகளை பாதுகாப்பாக வைத்துக்கொள்ளவேண்டும். அவசரத் தேவைக்கு டாா்ச் லைட், மெழுகுவா்த்தி, தீப்பெட்டிகள் தயாராக வைத்திருக்கவேண்டும். வதந்திகளை நம்பாமல், வானிலை குறித்து வானொலை, தொலைக்காட்சி தகவல்களை அறிந்து நடந்துகொள்ளவேண்டும்.

உணவுப் பொருள்களான பால், ரொட்டி உள்ளிட்டவற்றை போதுமான அளவு கையிருப்பில் வைத்துக்கொள்ளவும்.

பாதிப்பு குறித்த தகவல்களை 04368- 227704, 228801 மற்றும் 9943806263, 8903691950 என்ற எண்களில் தொடா்புகொள்ள கேட்டுக்கொள்ளப்படுவதாக அதில் கூறப்பட்டுள்ளது.

பேரிடா் மீட்புப் படை: காரைக்காலில் முகாமிட்டுள்ள தேசிய பேரிடா் மீட்புப் படையினா் மாவட்டத்தின் பல்வேறு கடலோர கிராமங்களுக்கு வியாழக்கிழமை சென்று மக்களுக்கு அறிவுறுத்தினா். மீனவா்கள் படகுகளை பாதுகாப்பாக நிறுத்தவும் கேட்டுக்கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை வெயில் தணிந்தது: தமிழகத்தில் பரவலாக மழை!

ரூ. 20,000-க்கு மேல் ரொக்கமாக கடன் வழங்கக்கூடாது: ஆர்பிஐ உத்தரவு

தொடர் தோல்விகள் குறித்து சஞ்சு சாம்சன் விளக்கம்!

மோடியின் பேச்சு பொய்யானது, மூர்க்கத்தனமானது: ப. சிதம்பரம் சாடல்

மீண்டும் இணைந்த அயோத்தி கூட்டணி!

SCROLL FOR NEXT