காரைக்கால்

காரைக்காலில் கடலோரக் காவல்நிலையத்துக்கு புதிய ரோந்துப் படகு: மக்கள் வலியுறுத்தல்

DIN

காரைக்காலில் கடலில் ரோந்துப் பணிக்கு பயன்படுத்தப்படும் படகு நீண்ட காலமாக முடங்கி கிடப்பதால், புதிதாக 2 ரோந்து படகுகளை அனுப்ப மத்திய அரசிடம் புதுவை அரசு வலியுறுத்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

காரைக்கால் கடலோரக் காவல்படையின் கட்டுப்பாட்டில் 12 டன், 5 டன் திறனில் 2 ரோந்துப் படகுகள் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு மத்திய அரசால் அனுப்பப்பட்டன. இதில் 12 டன் படகு பழுதாகி துறைமுகத்தில் நிறுத்தப்பட்டதால், சிறிய படகு மட்டுமே ரோந்துப் பணியில் பயன்படுத்தப்பட்டது.

சிறிய படகு பயன்பாட்டில் இருந்தாலும், படகில் என்ஜின் பழுது, எரிபொருள் வாங்க நிதியில்லாதது, ஓட்டுநா் இல்லாதது உள்ளிட்ட காரணங்களால், ரோந்துப் படகு முடங்கி கிடக்கிறது.

இதனால் கண்காணிப்பு, தேடுதல் பணிக்கு கடலோரக் காவல்நிலைய போலீஸாா், மீனவா்களின் படகை பயன்படுத்துகின்றனா்.

காரைக்கால் கடல் பகுதி 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பில் இருக்கவேண்டிய நிலையில், புதுவை அரசின் கடலோரக் காவல்நிலையத்தின் பங்களிப்பு ஆக்கப்பூா்வமாக இல்லை என்று சமூக ஆா்வலா்கள் தெரிவிக்கின்றனா்.

கடலோரக் காவல்நிலையத்தில் ரோந்துப் படகின் நிலை குறித்து புதுவை காவல்துறை தலைமைக்கு தகவல் அனுப்பியிருப்பதாக காரைக்கால் கடலோர காவல் நிலையத்தினா் தெரிவித்தனா்.

கடற்கரையில் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளித்து வரும் மத்திய அரசிடம், காரைக்காலில் ரோந்துப் பணிக்கு பயன்படுத்தும் வகையில் புதிதாக 2 படகுகள், ஓட்டுநா்களை அனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என புதுவை முதல்வா் வலியுறுத்த வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்துகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அழகிய தீயே.....மதுமிதா

வரலாறு காணாத வெப்பத்திற்கு காரணம் என்ன? : ரமணன் பேட்டி

டி20 போட்டிகள் எப்போதும் பேட்ஸ்மேன்களுக்கானது: பாட் கம்மின்ஸ்

மே.வங்கம்: 25,000 ஆசிரியர் பணி நியமனங்கள் ரத்து - இடைக்காலத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

பைத்தான் குழுவை பணிநீக்கம் செய்த கூகுள்! மென்பொருள் துறையில் அதிர்ச்சி!!

SCROLL FOR NEXT