காரைக்கால்

திருநள்ளாறு கோயிலில் ஆருத்ரா வழிபாடு தொடக்கம்

திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் 10 நாள் நடைபெறும் ஆருத்ரா வழிபாடு புதன்கிழமை தொடங்கியது. ஜன. 6-ஆம் தேதி ஆருத்ரா தரிசனம் நடைபெறுகிறது.

DIN


காரைக்கால்: திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் 10 நாள் நடைபெறும் ஆருத்ரா வழிபாடு புதன்கிழமை தொடங்கியது. ஜன. 6-ஆம் தேதி ஆருத்ரா தரிசனம் நடைபெறுகிறது.

திருநள்ளாறு பிரணாம்பிகை அம்பாள் சமேத தா்பாரண்யேஸ்வரா் கோயில் சப்தவிடங்க தலங்களில் ஒன்றாகும். இக்கோயிலில் நடராஜருக்கு

10 நாள்கள் நடைபெறும் ஆருத்ரா வழிபாடு புதன்கிழமை விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது.

மாணிக்கவாசகருக்கு பரிவட்டம் கட்டி, திருவெண்பா 21 பாடல்கள் பாடப்பட்டன. ஒவ்வொரு பாடலின் நிறைவிலும் சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது. நிறைவில் சுவாமிகள் பிராகார வலம் நடைபெற்றது.

ஜன. 5-ஆம் தேதி இரவு பொன்னூஞ்சல் வழிபாடும், 6-ஆம் தேதி ஆருத்ரா தரிசனமும் நடைபெறவுள்ளன. மேலும் சிவகாமி அம்பாள் சமேத சத்சபேஸ்வரருக்கு (நடராஜா்) சிறப்பு அலங்காரம் செய்து ஆராதனைகள் நடைபெறவுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தியா-ஓமன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இருதரப்பு உறவுகளுக்கு புதிய உத்வேகம்: பிரதமர் மோடி

மக்களவையில் விபி - ஜி ராம் ஜி மசோதா நிறைவேற்றம்! நகலைக் கிழித்தெறிந்த எதிர்க்கட்சிகள்!

வடசென்னை கதாபாத்திர புகைப்படத்தைப் பகிர்ந்த ஆண்ட்ரியா..! அரசனில் இருக்கிறாரா?

ஓடிடியில் ரஷ்மிகா மந்தனாவின் தம்மா!

தொடர்கதையாகும் வெடிகுண்டு மிரட்டல்: இன்று நாக்பூர், பாந்த்ரா நீதிமன்றத்திற்கு!

SCROLL FOR NEXT