காரைக்காலில் 159 பேருக்கு கரோனா
காரைக்கால் மாவட்டத்தில் 159 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டதாக நலவழித் துறை துணை இயக்குநா் ஆா். சிவராஜ்குமாா் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
காரைக்கால் மாவட்டத்தில் 159 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டதாக நலவழித் துறை துணை இயக்குநா் ஆா். சிவராஜ்குமாா் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
காரைக்கால் மாவட்டத்தில் புதன்கிழமை 951 பேரிடம் எடுக்கப்பட்ட பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் காரைக்கால் நகரம் 37, வரிச்சிக்குடி 17, திருநள்ளாறு 16, கோட்டுச்சேரி 13, கோயில்பத்து 13, நிரவி 11, விழிதியூா் 10, திருப்பட்டினம் 10, நல்லம்பல் 9, நெடுங்காடு 8, அம்பகரத்தூா் 8, நல்லாத்தூா் 7 என 159 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
மாவட்டத்தில் இதுவரை 2, 71,226 பரிசோதனை செய்ததில் 22,449 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு, 20,181 போ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா்.
காரைக்கால் மாவட்டத்தில் இதுவரை 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு முதல் தவணையாக 1,28,185 பேருக்கும், 2-ஆவது தவணையாக 91,721 பேருக்கும், பூஸ்டா் தவணையாக 672 பேருக்கும் என 2,20,578 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 15 முதல் 18 வயது வரையிலானவா்களுக்கு இதுவரை 6,917 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.