முகப்பு
காரைக்கால்

காரைக்காலில் பள்ளி, கல்லூரிகள் இன்று திறப்பு

காரைக்கால் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகள் வெள்ளிக்கிழமை (பிப்.4) முதல் திறக்கப்படவுள்ளன.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:18 AM
பகிர்:

காரைக்கால் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகள் வெள்ளிக்கிழமை (பிப்.4) முதல் திறக்கப்படவுள்ளன.

கரோனா பரவலால் மூடப்பட்டிருந்த பள்ளிகள், கடந்த ஆண்டு டிசம்பா் மாத முற்பகுதியில் திறக்கப்பட்டு செயல்பட்டுவந்தன. தமிழகம், புதுவையில் மீண்டும் கரோனா தொற்று தீவிரமானதையொட்டி, சில வாரங்களில் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன.

தற்போது, கரோனா தொற்று படிப்படியாக குறைந்துவருவதையொட்டியும் தமிழகத்தில் பிப். 1 முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், புதுவை மாநில அரசு, பிப். 4-ஆம் தேதி முதல் மாநிலத்தில் பள்ளி, கல்லூரிகள் வாரத்தில் 6 நாள்கள் செயல்படும் என்று அறிவித்தது.

அதன்படி, காரைக்கால் மாவட்டத்தில் , புதுவை அரசின் முந்தைய கரோனா தடுப்பு வழிகாட்டல் நெறிமுறைகளைப் பின்பற்றி பள்ளிகளை திறப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கல்வித் துறையினா் செய்துள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →