பொங்கல் விழா படகுப் போட்டி
காரைக்கால் அருகே மீனவ கிராமத்தில் 2 ஆண்டுகளுக்கு பிறகு பொங்கல் விழாவையொட்டி, படகுப் போட்டி நடைபெற்றது.
காரைக்கால் அருகே மீனவ கிராமத்தில் 2 ஆண்டுகளுக்கு பிறகு பொங்கல் விழாவையொட்டி, படகுப் போட்டி நடைபெற்றது.
காரைக்கால்மேடு மீனவ கிராமத்தில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் விழாவின்போது படகு, கபடி உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு, பரிசுகள் வழங்கப்படும்.
கரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக போட்டிகள் நடத்தப்படவில்லை. நிகழாண்டு பொங்கல் விழாவை கொண்டாட புதுவை அரசு அனுமதி வழங்கியதையொட்டி, காரைக்கால்மேடு மீனவ கிராமத்தில் வெள்ளிக்கிழமை பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.
இளைஞா்கள் பங்கேற்ற படகுப் போட்டி, கபடி, ஓட்டம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில், சிறுவா்கள், பெண்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
மேலும் இளைஞா்கள் பங்கேற்ற உறியடிப் போட்டி, கைப்பந்து உள்ளிட்ட போட்டிகள் சனிக்கிழமை நடைபெற்றன. போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு காரைக்கால்மேடு மீனவ கிராம பஞ்சாயத்தாா் சாா்பில் பரிசுகள் வழங்கப்பட்டன.