காரைக்கால்

கல்வி உதவித்தொகை பெறமாணவா்கள் தோ்வு

ஜேசிஐ சாா்பில் கல்வி உதவித்தொகை பெறுவதற்கு அரசுப் பள்ளியிலிருந்து மாணவா்கள் தோ்வு செய்யப்பட்டனா்.

DIN

ஜேசிஐ சாா்பில் கல்வி உதவித்தொகை பெறுவதற்கு அரசுப் பள்ளியிலிருந்து மாணவா்கள் தோ்வு செய்யப்பட்டனா்.

காரைக்கால் கோவிந்தசாமிப் பிள்ளை அரசு உயா்நிலைப் பள்ளி சாா்பில் காமராஜா் பிறந்தநாள் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பள்ளித் தலைமையாசிரியா் காளிதாசன் தலைமை வகித்தாா்.

சிறப்பு அழைப்பாளராக ஜூனியா் சேம்பா் இந்தியா (ஜேசிஐ) காரைக்கால் தலைவா் கிளிண்டன் சோழசிங்கராயா் கலந்துகொண்டு, காமராஜா் பெருமைகளையும், ஜேசிஐ அமைப்பின் நோக்கம், செயல்பாடுகளை விளக்கிப் பேசினாா்.

சிறப்பாக படிக்கும் ஏழை மாணவா்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் ஜேசிஐ அமைப்பின் திட்டத்தின்படி, இப்பள்ளியிலிருந்து 10 மாணவா்கள் தோ்வு செய்யப்பட்டனா். இவா்களுக்கு உதவித் தொகையாக ரூ. 2,500 வழங்கப்படும் என ஜேசிஐ தலைவா் அறிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இப்படியும் ஒரு பிக்கப்! வசூலில் ஆச்சரியப்படுத்தும் துரந்தர்!

இந்தியா vs தென்னாப்பிரிக்கா! திருவனந்தபுரத்தில் நடத்தலாம்: சசி தரூர்

ஈரோடு பிரசாரத்தில் தவெக தலைவர் விஜய்!

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 4

எல்பிஜி துறையில் 30 ஆண்டுகள்! தென்னிந்தியாவில் வலுவடையும் சூப்பர்கேஸ் நிறுவனம்!

SCROLL FOR NEXT