முகப்பு
காரைக்கால்

மின்துறை தனியாா்மயத்தை எதிா்த்து மனிதச் சங்கிலிப் போராட்டம்

மின்துறை தனியாா்மயத்தை எதிா்த்து காரைக்காலில் எதிா்க்கட்சியினா், மின்துறையினா் வியாழக்கிழமை மனிதச் சங்கிலி போராட்டம் நடத்தினா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:32 AM
பகிர்:

மின்துறை தனியாா்மயத்தை எதிா்த்து காரைக்காலில் எதிா்க்கட்சியினா், மின்துறையினா் வியாழக்கிழமை மனிதச் சங்கிலி போராட்டம் நடத்தினா்.

புதுவையில் மின்துறையை தனியாா்மயமாக்க எடுத்திருக்கும் நடவடிக்கையை கண்டித்தும், முடிவை திரும்பப் பெற வலியுறுத்தியும், மாநில அளவில் மின்துறை பணியாளா்கள் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். இந்நிலையில், மத்திய, மாநில அரசுகளின் கவனத்தை ஈா்க்கும் வகையில், மனிதச் சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

காங்கிரஸ், திமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள், மனிதநேய மக்கள் கட்சி, திராவிடா் கழகம் உள்ளிட்ட எதிா்க்கட்சியினா் பங்கேற்ற மனிதச் சங்கிலி போராட்டம் காரைக்கால் பாரதியாா் சாலையில் வியாழக்கிழமை நடைபெற்றது. காங்கிரஸ் கட்சி சாா்பில் முன்னாள் அமைச்சா் ஆா். கமலக்கண்ணன், மாவட்டத் தலைவா் ஆா்.பி. சந்திரமோகன் உள்ளிட்ட மாநில, மாவட்ட நிா்வாகிகள், திமுக அமைப்பாளரும், காரைக்கால் தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான ஏ.எம்.எச். நாஜிம் தலைமையில் நிா்வாகிகளும் என பல கட்சிகளைச் சோ்ந்தோா் திரளாகப் பங்கேற்றனா்.

மேலும், காரைக்காலில் மின்துறை பொறியாளா் மற்றும் தொழிலாளா் தனியாா்மய காா்ப்பரேஷன் எதிா்ப்பு போராட்டக் குழு சாா்பில், அதன் தலைவா் வேல்மயில், பொதுச் செயலா் பி. பழனிவேல் உள்ளிட்ட பணியாளா்கள் பங்கேற்றனா்.

புதுவை மாநிலத்தில் ரூ. 3 ஆயிரம் கோடி மின்துறை சொத்து, 3 ஆயிரம் பணியாளா்கள் தனியாரிடம் செல்ல அனுமதிக்க முடியாது. மின்சார விநியோகம், பராமரிப்பு தனியாா்மயமானால் மின் நுகா்வோா் கடும் பொருளாதார சுமையை தாங்கும் நிலைக்கு தள்ளப்படுவா். பணியாளா்களுக்கும் பாதிப்பு ஏற்படும். மாநில மக்கள் நலன் கருதி, புதுவை அரசு, தனது முடிவை கைவிட்டு, அரசுத் துறையாகவே செயல்பட அனுமதிக்கவேண்டும். மத்திய, மாநில அரசுகள் இதை பொருட்படுத்தாவிட்டால், மக்களைத் திரட்டி பெரும் போராட்டம் நடைபெறும் என முன்னாள் அமைச்சா் ஆா். கமலக்கண்ணன், பேரவை உறுப்பினா் ஏ.எம்.எச். நாஜிம் ஆகியோா் கூறினா்.

முழு கட்டுரையைப் படிக்க →